தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.4 தொகுப்புரை

    இனிய மாணாக்கர்களே, இப்பாடத்தின் வழி நாம் படித்த செய்திகளைத் தொகுத்துக் காண்போம். காண்பது, நினைவில் இறுத்துவதற்குத் துணையாகும்.

    தொடைகள் எட்டனுள் ஐந்தே விகற்பம் பெறும் தொடைகள், அந்த ஐந்தாவன: மோனைத் தொடை, இயைபுத் தொடை, எதுகைத் தொடை, முரண் தொடை, அளபெடைத் தொடை.

    விகற்பம் பெறாத தொடைகள் மூன்று, அவை: இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை, செந்தொடை. இவை மூன்றும் விகற்பம் பெறாமைக்கான காரணங்கள்:

    1. இரட்டைத் தொடையில் வந்த சொல்லே நான்கு முறை இரட்டித்தல்.

    2. அந்தாதி சீர்நோக்கியது அன்று: அடியை நோக்கியது.

    3. செந்தொடையில் எந்தத் தொடையும் இல்லை.

    விகற்பம் என்பதன் பொருள் வேறுபாடு, வகை என்பனவாம்.

    இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் வகைகள் உளவாகின்றன.

    இணை முதலாய ஏழனுக்குமான பெயர்க்காரணங்கள் காணப்பட்டன.

    இணை மோனை தொடைகள் ஐந்தனோடு தொடை விகற்பங்கள் ஏழனை உறழ உண்டாகும் விகற்பங்களின் விரி 35ஐயும் காட்டுகளுடன் கண்டறிந்தோம்.

    தொடையும் தொடை விகற்பங்களும் மொத்தம் 43 என்பதனையும் கணக்கிட்டறிந்தோம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    விகற்பம் பெறும் தொடைகளோடு விகற்பங்கள் ஏழனை உறழ வரும் தொடை விகற்பங்கள் எத்தனை?
    2.
    தொடையும் தொடை விகற்பங்களுமாக மொத்தத் தொடைகள் எத்தனை?
    3.
    தொடையைக் காண நம்முடைய பார்வை, செய்யுளின் மேல் எவ்வகையில் செல்லவேண்டும்?
    4.
    தொடை விகற்பத்தைக் காண நம்முடைய பார்வை எதன்மேல் செலுத்தப்படவேண்டும்? எவ்வாறு செலுத்துதல் வேண்டும்?
    5.
    இயைபுத் தொடை விகற்பங்களைக் கண்டறிய, ஓரடியின் சீர்களை இடமிருந்து வலமாகப் பார்க்கலாமா? பார்க்கலாம் எனினும் பார்க்கலாகாது எனினும் அதற்கான காரணம் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2017 18:48:01(இந்திய நேரம்)