தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses-ஒலி மாற்றங்களின் இரு வேறு பிரிவுகள்

  • 5.5 ஒலி மாற்றங்களின் இரு வேறு பிரிவுகள்

        ஒலி     மாற்றங்கள்     இருவேறு     வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மொழிகளின் ஒலியமைப்பை ஆராய்கின்ற அறிஞர்கள் ஒலி (phone) என்றும் ஒலியன் (phoneme) என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பர். ஒலி என்று இங்குக் குறிப்பிடுவது மாற்று ஒலிகளையே (allophones) ஆகும். எனவே ஒன்றை ஒலி மாற்றம் (phonetic change) என்றும், மற்றொன்றை ஒலியன் மாற்றம் (phonemic change) என்றும் குறிப்பிடலாம்.

    5.5.1 ஒலி மாற்றம் (phonetic change)

        ஒரு     மொழியின்கண் குறிப்பிட்ட ஒலியன்களைக் (phonemes) காண்கிறோம். அதைப் போன்றே குறிப்பிட்ட அளவு மாற்று ஒலிகளைக் (allophones) காண்கிறோம். மொழியின் வரலாற்றில் சில ஒலி மாற்றங்கள் (sound change) நிகழும் போது ஒலியன்களின் எண்ணிக்கையை அவை பாதிப்பது இல்லை. ஒரு ஒலியன் மற்றொரு ஒலியனாக மாறுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிப்பது இல்லை . இந் நிலையில் அது மொழியின்     ஒலியன் அமைப்பினைத் தாக்குவதுமில்லை. இதனையே ஒலி மாற்றம் (phonetic change) எனக் குறிப்பிடுகின்றனர்.

        தமிழில் மகன் என்ற சொல்லினை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லின் இடையில் காணப்படும் ககரத்தை ‘g’ ஆக ‘magan’ என்று சிலர் உச்சரிக்கின்றனர். இன்னும் சிலர் ‘h’ ஒலியாக ‘mahan’ என்று உச்சரிக்கின்றனர். பண்டைக் காலத்தில் இவ்வொலி (‘h’) உரசொலியாக இருந்தது எனக் கருதலாம். உரசொலியாக     இருந்த     இவ்வொலி, ‘g’ ஆக உச்சரிக்கப்படும்போது ககர ஒலியனின் ஒரு மாற்றொலியாகவே காணப்படுகிறது. இன்னொரு மாற்றொலியாக இருந்த அது வழக்கொழிய அதனிடத்தில் குரல் உடை ஒலி இடம்பெறக் காணுகிறோம். எனவே இந்த ஒலி மாற்றத்தினால் மேலும் ஒரு மாற்றொலி தோன்றுகிறதே தவிரப் புதிய ஒலியன்கள் எதுவும் தோன்றவில்லை     உச்சரிப்பில் மாற்றமே தவிர ஒலியன் அமைப்பில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. எனவேதான் இத்தகைய மாற்றம் ஒலிமாற்றம் எனப்படுகிறது.

    5.5.2 ஒலியன் மாற்றம் (phonemic change)

        சில மாற்றங்கள் மொழிகளின் ஒலியன்களின் அமைப்பை மாற்றி விடுகின்றன. இம் மாற்றங்கள் ஒலியன்களின் எண்ணிக்கையைக்     கூட்டவோ, குறைக்கவோ செய்யும். பழங்காலத் தமிழில் ஸகரம் (s) ஜகரம் (j) ஆகியவை ஒலியன்களாக இல்லை. ஆனால் தற்காலத் தமிழிலோ அவை இரண்டும் ஒலியன்களாக உள்ளன.

        சான்று:

        ஸந்தர்ப்பம் (வாய்ப்பு)

        ஸாகரம் (கடல்)

        போன்ற சொற்களில் ஸகரம் தனி ஒலியனாகி விட்டதைக் காண்கிறோம். இத்தகைய சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழில் கடன் பேறு விளைவாக வந்தனவாகும். வடமொழியில் உள்ள ஸ என்ற ஒலியனின் செல்வாக்கால், தமிழில் உள்ள ச (c) என்ற     ஒலியன் ஸ     (s) என்ற ஒலியனாக மாற்றி உச்சரிக்கப்படுகின்றது.

        சான்று:

    சோறு
    > ஸோறு
    சிவப்பு
    > ஸெவப்பு
    சங்கம்
    > ஸங்கம்

        இவ்வாறு ஓர் ஒலியன் (ச) , இன்னொரு ஒலியனாக (ஸ) மாறுவது ஒலியன் மாற்றம் எனப்படுகிறது.

         என்ற ஒலியனைப் போன்றே தமிழ் மொழியின் வரலாற்றில் ஜகரம் (j) புதியதொரு ஒலியனாக வருதல் காணலாம். இதுவும்     பெரும்பாலும் கடன்பேற்றுச் சொற்களிலேயே காணப்படுகிறது.

        சான்று:

        ஜாதி

        ஜாக்கிரதை

        ஒலியன் மாற்றத்தை மொழியியலார் பிளவு (split) என்றும், இணைவு     (merger)     என்றும் இருவகைப்படுத்தியும் ஆராய்கின்றனர்.

  • பிளவு

  •     ஒரு மொழியில் காணப்படும் ஒரு ஒலியன் காலப்போக்கில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒலியன்களாகப் பிரியுமானால் அதனைப் பிளவு என்று கூறுவர். தமிழில் சோறு என்பதை,

        co : ŗu

        so : ŗu

        என இருவகையாக ஒலிப்பதால், ச /c/ என்ற ஒலியன், /c/, /s/ என்ற இரண்டு ஒலியன்களாகப் பிரிந்து விட்டது. இத்தகைய பிளவினை,

        என்ற விதியின் கீழ் மொழியியலார் அடக்குவர்.

  • இணைவு

  •     இரண்டு ஒலியன்கள் ஒன்றாக இணைகின்ற மாற்றத்தையே இணைவு என்று கூறுவர்.

        தமிழ் மொழியில் எழுத்து வழக்கில் /ழ்/, /ள்/ என்ற இரண்டும் இருவேறு ஒலியன்கள்.

        சான்று:

        வா

        வா

        ஆனால் தற்காலத் தமிழில் பேச்சுவழக்கில் /ழ்/, /ள்/ ஆகிய இரண்டு ஒலியன்களும் /ள்/ என்ற ஒரே ஒலியனாகி விட்டது.

        சான்று:

        வாழைப்பம் > வாப்பம்

        இத்தகு இணைவினை,

        என்ற விதியின் கீழ் மொழியியலார் அடக்குவர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:34:35(இந்திய நேரம்)