தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.6

  • 3.6 தொகுப்புரை

        இசைக் கருவிகள் தோல், துளை,நரம்பு, கஞ்சக் கருவிகளாக வகைப்படும் திறனையும், பறை, குழல்,வீணைக் கருவிகளின் அமைப்பையும்இப்பாடப்பகுதி விளக்கியுள்ளது.

        இந்நிலையில் அடுத்து வரும் இரண்டாவது பாடத்தில் மங்கல இசை பற்றிய செய்திகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

        தமிழகத்தின் தனிப்பெரும் இசைக்குழுவாக விளங்கும் மங்கல இசைக்குழு தமிழகத்தின் சிறப்பை உலகறியச் செய்த குழுவாகும். ஆலயத்தில் தோன்றி, ஆலயத்தால் வளர்க்கப்பட்டு, ஆலயத்தோடு வாழ்ந்து வரும் கலையாகும். தமிழிசையின் தொன்மையையும் சிறப்பையும் வளத்தையும் காப்பாற்றி, வளர்ந்து வருகிறது. தலைசிறந்த கலைஞர்களால் இக்கலை மேம்பட்டது. தமிழகத்தில் தமிழர்கள் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் இக்குழு இடம் பெற்று வருகிறது. மிகச்சிறந்த தொடர்ந்திசைக் கருவியாக நாகசுரமும் இராச வாத்தியம் என்ற நிலையில் தவிற்கருவியும், சிறப்பான நாதம் தரும் கஞ்சக் கருவியும், இவை அனைத்தையும் ஒரே சுருதியில் கொண்டு வரும் ஒத்துக் கருவியும் இணைந்த இக்குழுவை மேளம் என்று அழைக்கின்றனர்.

     
         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    மேளம் என்ற சொல்லின் பொருள் யாது?
    2.
    நாகசுர வகைகளைக் குறிப்பிடுக.
    3.
    இரட்டை நாயன முறையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
    4.
    பெரிய மேளம், சின்ன மேளம் என்பன எவைகளைக் குறிக்கும்?
    5.
    கிடுகிட்டி என்றால் என்ன?
    6.
    தவில் பெயர்க்காரணம் கூறுக.
    7.
    தோடி இராகத்திற்குச் சிறப்புச் செய்த நாகசுரக் கலைஞர் யார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 18:33:09(இந்திய நேரம்)