தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- தமிழிசை வளர்ச்சி

  • பாடம் - 6

    D05136 தமிழிசை வளர்ச்சி

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

         தமிழ் இசை வளர்ச்சிக்கென ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலைகளைப் பற்றியும், இசைத் தமிழ் ஆய்விற்கு மூல இலக்கியமாகச் சிலப்பதிகாரமும், இந்நூலுக்கு எழுந்த உரைநூற்களான அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் பயன்பட்ட நிலை பற்றியும் இந்தப் பாடம் குறிப்பிடுகின்றது.

        சிலப்பதிகாரம் உரையுடன் வெளியிடப்பட்ட பின்பு, தஞ்சாவூர் மு.ஆபிரகாம் பண்டிதர், யாழ் நூலாசிரியர் விபுலானந்த அடிகளார், மதுரை பொன்னுச்சாமி பிள்ளை போன்றோர் இசைத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் மேற்கொண்ட இசைத் தமிழ் ஆய்வினை உணர வைக்கிறது.

        மேலும் குடந்தை ப.சுந்தரேசன், கு.கோதண்டபாணி, வெள்ளை வாரணனார், பேராசிரியர். வீ.ப.கா.சுந்தரம், பேராசிரியர் தனபாண்டியன் போன்றோர் இவ்வகை ஆய்வினை மேற்கொண்ட நிலைகளை எடுத்துரைக்கின்றது.

        இசைக்கலைக்கு அடிப்படையாக அமையும் இசைக் கலைஞர்கள் பற்றி எடுத்துரைக்கின்றது.

        மிடற்றிசை, கருவி இசைக் கலைஞர்களுள் ஆண்பால், பெண்பால் கலைஞர்களின் கலைச் சிறப்பை உணர வைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தஞ்சாவூர் மு.ஆபிரகாம் பண்டிதர் இசைத் தமிழ் ஆய்வின் முன்னோடியாக விளங்குகிறார் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
    • பண்டைய யாழ்க் கருவியின் அமைப்பு, சிறப்பு நிலைகளை உணர்ந்து கொள்ளலாம்.
    • தமிழிசை ஆய்வு மேற்கொண்ட பலரைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    • கலைத் தொண்டாற்றுவதனை வாழ்வியலாகக் கொண்ட கலைஞர்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    • வாழையடி வாழையென வரும் இசைக் கலைஞர்களால் இசை மரபுகள் பேணப்பட்டு வருகின்றன என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.
    • ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற நிலையில் வாழ்ந்த பெண்களைப் பற்றி அறியலாம்.
    • செவ்வியல் இசைக் கலைஞர்கள் பற்றியும் நாட்டுப் புற இசைக் கலைஞர்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:08:56(இந்திய நேரம்)