Primary tabs
-
பாடம் - 1
D05131 பண்டைக்கால இசைஇந்தப் பாடம் என்ன சொல்கிறது?
முச்சங்க காலத்தில் இசை, நாடக இலக்கணங்கள் இருந்தமையைச் சுட்டிக்காட்டியும் தொல்காப்பியத்தில் இசைக்கூறுகள் இருந்தமையைக் குறிப்பிட்டும் தமிழிசையின் தொன்மையை இப்பாடம் நிலைநாட்டுகிறது.
தமிழர்களின் ஐந்திணைக்கும் உரிய பண்களை எடுத்துக்காட்டி அந்தந்தப் பண் இசைப்பதற்குரிய காலத்தையும் வரையறை செய்திருப்பது இசைக்கலையில் அவர்கள் பெற்றிருந்த திறனுக்குச் சான்றாவதை விளக்குகிறது.
ஏழிசை, ஏழிசை ஏழு சுரங்களாகியது. பண்களின் எண்ணிக்கை, கலைப்பிரிவினர், யாழ், குழல் போன்ற இசைக் கருவிகள், தாளங்கள், இசைபாடுவோர் தகுதி, தாளக் கருவியாளர் தகுதி ஆகிய அனைத்தும் மிக விரிவாக இப்பாடத்தில் சொல்லப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- தமிழிசையின் தொன்மையை அறிந்து கொள்ளலாம்.
- பண்கள் (இசை) வகைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறையைச் சுட்டிக் காட்டலாம்.
- பழந்தமிழர் இசைத்த நரம்புக்கருவி, காற்றுக்கருவி, தோற்கருவி வகைகளைப் பகுத்துக் காணலாம்.
- பழந்தமிழகக் கலைப் பிரிவினரில் பாணர் கலைத்திறன்கள், இசைக் கருவியாளர் ஆற்றல்கள் ஆகியவற்றைத் தொகுத்துக் கொள்ளலாம்.
- இசைக்கலைஞர்களின் தகுதிகளை வரையறை செய்து கொள்ளலாம்.
- பழந்தமிழர் இசைமரபின் தொடர்ச்சியைக் காணலாம்.