தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

        பழந்தமிழர் பாடிய பண் இசைகள் பற்றிப் பழமையான நூல்கள் கூறுகின்றன, முச்சங்கம் கூடிய இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை குறித்த இலக்கண நூல்களைத் தமிழர் எழுதியுள்ளனர். ஆனால் இந்நூல்கள் அழிந்துவிட்டன. இருப்பினும் தொல்காப்பியம், சங்கத்தொகை நூல்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் பழந்தமிழர் இசை பற்றிப் பல செய்திகள் கிடைக்கின்றன. பழந்தமிழர் பாடிய இசையைப் ‘பண்’ என்றனர். ஐவகை நிலத்திற்கு ஏற்ற பண்களையும் இசைக் கருவிகளையும் உருவாக்கினர். பண்களைப் பாடுவதற்கும் கருவிகளை இசைப்பதற்கும் கலை வகுப்பினர் இருந்தனர். தத்தம் கலை முறைகளில் நல்ல திறன் பெற்றவர்கள் சமுதாயத்தால் மதிக்கப்பெற்றனர்.

        பழந்தமிழர் பண்ணிசை முறை பக்தி இயக்க காலத்தில் நாடெங்கும் விரைந்து பரவியது. தேவாரப் பண்களும், பாசுரப் பண்களும் பிற்காலத்தில் கருநாடக இசை என்னும் பெயரில் பழந்தமிழர் இசை வளம்பெற உதவின.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    கோடிட்ட இடங்களை நிரப்புக. அ) சிறிய உருவத்தில் இருக்கும் யாழ் ------------ எனப்படும். ஆ) 21 நரம்புகள் உடைய யாழ் ------------ எனப்படும்.
    2.
    சம்பூரண இராகத்தைப் பழந்தமிழர் எவ்வாறு அழைத்தனர்?
    3.
    மிடற்றுப் பாடல் என்றால் என்ன?
    4.
    யாழ், குழல், முழவு, இவற்றில் எது தாளக் கருவி?
    5.
    தண்ணுமை என்பது தாளக் கருவியா பண்ணிசைக் கருவியா?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 12:57:10(இந்திய நேரம்)