Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3)‘வில்லிபாரதம்’ - குறிப்பு வரைக.திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்த வில்லிபுத்தூராழ்வார் என்பவர் பாரதத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். அவர் பெயரையும் சேர்த்து, வில்லிபாரதம் என்று அது அழைக்கப்படுகிறது. இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு ஆகும். வடமொழியில் உருவான வியாச பாரதத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளது.