Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
6)
மாங்கனியைக் கண்ட அடலேறுவின் நிலையைக் கவியரசு கண்ணதாசன் எவ்வாறு குறிப்பிடுகிறார்?மாங்கனியின் ஆடல், பாடல், அழகில் மயங்கிய அடலேறு, ஒளியில்லாத விழிகளைக் கொண்டவனாகவும் நெஞ்சம் மட்டும் இங்கிருக்க, நினைவெல்லாம் வெளியிலுமாகச் சம்பந்தமில்லாத பேச்சுகளைப் பேசுபவனாகவும், காதல் ஒன்றே உள்ளத்தில் மூண்டிருக்கும் வாலிபனாகவும் அடலேறு காணப்பட்டான் என்று குறிப்பிடுகிறார்.