தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை முல்லைத் திணைப் பாடல்களின் முதல், கரு, உரிப்பொருள் அமைவு பற்றி அறிந்திருப்பீர்கள்; முல்லைத் திணையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள்; இலக்கியச் சுவையை உணர்ந்து மகிழ்ந்திருப்பீர்கள்.

    இந்தப் பாடத்தில்இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    ஏறு தழுவல், எருமைக் கொம்பை வழிபடல், மூவினம் வளர்த்தல், பால், மோர் விற்றல், விரிச்சி கேட்டல், பாசறையில் மகளிரும் பங்கேற்றல், குரவைக் கூத்திட்டு அரசனை வாழ்த்தல் முதலிய முல்லைத்திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது.

    முல்லைப் பாடல்களில் காணப்படும் உள்ளுறை போன்ற இலக்கியச் சுவையைப் புரிந்து சுவைக்க முடிந்தது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II
    1)

    ஏறு தழுவல் என்றால் என்ன?

    2)

    ஏறு தழுவலைக் குறிக்கும் அகநூல் எது?

    3)

    ஆயர் வளர்க்கும் மூவினம் யாவை?

    4)

    விரிச்சி கேட்டல் என்றால் என்ன?

    5)

    ‘இன்னே வருகுவர் தாயர்’- என்பதன் பொருள் யாது?

    6)

    தேர் மணியின் நாக்கைத் தலைவன் இழுத்துக் கட்டுவது ஏன்? இதனைக் கூறும் இலக்கியம் எது?

    7)

    முல்லைத் திணையில் எவ்வகையான உவமைகள் இடம் பெறுகின்றன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-07-2018 16:24:59(இந்திய நேரம்)