தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

குறிஞ்சிக்கோர் கபிலர்

  • 2.1 குறிஞ்சிக்கோர் கபிலர்

    குறிஞ்சித் திணையில் பல புலவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர். ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் குறிஞ்சித் திணையில் பாடப் பெற்றுள்ளன. குறிஞ்சி நில மக்களின் ஒழுக்கங்களை விளக்கும் குறிஞ்சிப்பாட்டு என்ற பத்துப்பாட்டு நூல் குறிஞ்சித் திணையை மிக விரிவாக விளக்கிச் சிறப்புச் சேர்க்கின்றது.

    ஐங்குறுநூற்றில் நூறு குறிஞ்சிப் பாடல்களையும் பாடியவர் கபிலர். கலித்தொகையில்குறிஞ்சிக்கலிப் பாடல்களைப் பாடியவரும் கபிலர். குறிஞ்சிப்பாட்டு நூலைப் பாடியவரும் அவரே. ஆகவே குறிஞ்சிக்கோர் கபிலர் என்று இவர் சிறப்பிக்கப்படுகிறார். அதனால் இப்பாடத்தில் ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றின் பாடல்களோ, கருத்துகளோ மேற்கோளாகக் காட்டப்படும் போது பாடிய புலவரின் பெயர் சுட்டப்படவில்லை. வேறு தொகை நூல்களில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாடல்களும் உள்ளன. பிற புலவர்கள் பாடியவையும் உள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-07-2018 17:03:37(இந்திய நேரம்)