Primary tabs
- 2.6 தொகுப்புரை
நண்பர்களே! இப்பாடத்தில் குறிஞ்சித் திணைப் பாடல்களின் முப்பொருள் வெளிப்பாடு பற்றி அறிந்திருப்பீர்கள். குறிஞ்சித் திணையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள். இலக்கியச் சுவை பற்றி அறிந்து மகிழ்ந்திருப்பீர்கள்.
இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
குறிஞ்சித் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது; இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படுவதை அறிந்து கொள்ள முடிந்தது.
அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலிய குறிஞ்சித் திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது.
குறிஞ்சிப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகிய இலக்கியச் சுவைகளைப் புரிந்து சுவைக்க முடிந்தது.