தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - -சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்

  • E
    பாடம் - 5

    P20215 - சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்
     


     


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    சைவ சமயம் சார்ந்து எழுந்த பல்வேறு சிற்றிலக்கிய வகை நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களையும் சுருக்கமாக இந்தப் பாடம் அறிமுகம் செய்கிறது.

    சைவச் சிற்றிலக்கியங்கள் புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழ் மொழிக்குத் தந்துள்ளதை இப்பாடம் குறிப்பிடுகிறது. பெரும்பாலான சிற்றிலக்கிய வகைகளின் முன்னோடிகளாகச் சைவச்சமயச் சான்றோர் விளங்கியமையை எடுத்துரைக்கிறது.

    சைவச் சிற்றிலக்கியங்கள் பலவும், திருமுறைகளுக்கு நிகராக சைவ மக்களால் போற்றப்படுகின்றன. அவை பாராயண நூல்களாகவும் விளங்குவதை இந்தப் பாடம் சுட்டுகிறது.

    மேலும் அருணகிரிநாதர், குமரகுருபரர் போன்ற பல்வேறு அருளாளர்களின் நூல்களைப் பற்றிய சிறப்புகள் விரித்துரைக்கப்படுகின்றன.



    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


     
    சைவ சமயம் சார்ந்து எழுந்த நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியத் தொகுதியையும், அவற்றின் ஆசிரியர்களையும், அவற்றின் காலத்தையும் சிறப்பியல்புகளையும் உள்ளவாறு காணல்.
     
    சைவச் சிற்றிலக்கியங்களில் சிவன் குறித்து எழுந்த சிற்றிலக்கியங்களே மிகுதி என்பதைப் பாகுபடுத்திக் காணும் போது அன்னை, முருகன், விநாயகர் தெய்வ வழிபாடுகள் சைவத்தில் கலந்திருப்பினும் சிவனுக்கே முதன்மை தந்துள்ளதை இனம் காணுதல்.
     
    சிவனை அடுத்து முருகப் பெருமான் மீது தான் அதிகமான இலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பதை அடையாளம் காணலாம்.
     
    பன்னிரு திருமுறைகளுள் இடம் பெற்றுள்ள சிற்றிலக்கியங்களுக்கு இணையான சிறந்த நூல்கள் பல, திருமுறைகள் தொகுக்கப்பட்ட காலத்திற்குப் பின்னரும் தோன்றி வளர்ந்துள்ளன என்ற வரலாற்று உண்மையைப் பிரித்துக் காணலாம்.
     

    தமிழ் இலக்கிய வளர்ச்சி வரலாற்றில் சைவ சமய இலக்கியங்களின் தோற்றத்திற்குச் சிவாலயங்களே மூலமாக அமைந்துள்ளன என்பதை இனங்காணலாம்.
     

    தமிழில் கிளைத்த புதிய இலக்கிய வடிவங்கள் சைவச் சார்பாகவே கிடைத்துள்ளன என்பதை அறிந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சைவ சமயத்தின் பங்களிப்பைக் கணிக்கலாம்.
     

    தனிப்பாடல்கள் வழி சைவ சமயம் பற்றிய கருத்துகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.
     

     

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:15:26(இந்திய நேரம்)