Primary tabs
-
5.2 ஒட்டக்கூத்தர்
சைவச்சிற்றிலக்கியம் படைத்த பெருங்கவிஞர்களில் ஒருவர் ஒட்டக்கூத்தர். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள கூத்தனூரில் இவர் வாழ்ந்திருந்தார். இவர் சோழர் அவையில் தலைமைப் புலவராக வீற்றிருந்து ‘மூவருலா’, குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் எனச் சில நூல்களை இயற்றியுள்ளார். தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூல் இதுவே என்பர் ஆராய்ச்சி அறிஞர்கள். இவர் சைவ சமயத்தின் மீது
பெரும் பற்றுக் கொண்டிருந்தார். தக்கன் இயற்றிய யாகத்தில் வீரபத்திரக் கடவுள் தோன்றி, யாகத்தை அழித்துத் தக்கனையும் தண்டித்த வீரச் செயல்களை விரித்து இவர் செய்த நூல் ‘தக்கயாகப் பரணி’ ஆகும்.