தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 5.6 இரட்டையர்கள்-5.6 இரட்டையர்கள்

  • 5.6 இரட்டையர்கள்

    பல வகைப் பூக்களால் கட்டப்பட்ட பூச்சரத்தைக் கதம்பம் என்று கூறுவர். பலவகைப் பாக்களாலும், பாவகைகளாலும் பாடப்படும் ஒருவகைச் சிற்றிலக்கியம் கலம்பகம் என வழங்கப்பட்டது. முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம் ஆகும். கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் சிறந்தவர்கள் என்பது

    சிதம்பரம்

    கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்

    (கண்பாய = பெருமையுடைய)

    என்ற பழந்தொடரால் அறியலாம். இரட்டையர்களால் பாடப்பெற்ற கலம்பகம் ‘தில்லைக் கலம்பகம்’. இவ்விருவருள் ஒருவர் முடவர் என்றும் மற்றவர் குருடர் என்றும் கூறப்படுகிறது. முதுசூரியர், இளஞ்சூரியர் என்பன அவர் தம் பெயர்கள். முடவரைக் குருடர் சுமந்து செல்வார். முடவர் வழி காட்டுவார்.

    இவர்கள் சோழநாட்டில் இலந்துறை என்ற ஊரினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும், பின் இரு அடியை மற்றவரும் பாடுவர். திருவாமாத்தூர்க் கலம்பகமும் இவர்களால் இயற்றப்பட்டது. காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் மீது ‘ஏகாம்பரநாதர் உலா’என்ற நூலை இவர்கள் பாடினர். இவர்களின் பிறிதொரு நூல் கச்சிக்கலம்பகம் என்பது. இவர்கள் பாடியனவாகச் சில தனிப்பாடல்களும் கிடைத்துள்ளன.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    இரட்டையர்களின் இயற்பெயர்கள் யாவை?
    2.
    ஒட்டக்கூத்தர் இயற்றிய பரணி நூல் யாது?
    3.
    அதிவீரராமர் பாடிய இருநூல்களின் பெயர்களைத் தருக.
    4.
    கந்தர் அனுபூதி பாடியவர் யார்? பாடல்தொகை எத்தனை?
    5.
    அருணகிரிநாதர் இயற்றிய சிறு நூல்களுள் இரண்டினைக் குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 13:05:08(இந்திய நேரம்)