தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - -தலபுராணங்களும் பிற புராணங்களும்

  • E
    பாடம் - 6

    P20216 - தல புராணங்களும் பிற புராணங்களும்
     

     


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    சைவ சமய இலக்கிய வகைகளுள் ஒன்றாகிய தலபுராணங்கள் பற்றியும் அவற்றுள் பெரும்பாலானவை சிவனைப் பற்றியே எழுதப்பட்டன என்பதனைப் பற்றியும் இப்பாடம் சொல்கிறது. அந்தந்தத் தலப் பெருமையும் சுட்டிக் காட்டப்படுகிறது.

    சைவ புராணங்களில் சிறப்பு வாய்ந்தவையாகப் போற்றப்படும் திருவிளையாடற்புராணம், கந்தபுராணம், கோயில் புராணம், காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம் முதலியவற்றின் சிறப்பு இப்பாடத்தில் விரித்துரைக்கப்படுகிறது.

    மேலும் மாயூரப் புராணம், சீகாழித் தலபுராணம் போன்ற தலபுராணங்களும் சுருக்கமாகப் பேசப்படுகின்றன.
     


     


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
     

     

    தலபுராணங்கள் என்றால் என்ன? அவை ஏன் தோற்றம் கொண்டன? இவை தோற்றம் கொள்ள காரணமான சூழ்நிலைகள் யாவை என்பனவற்றை மதிப்பிடலாம்.
     

    சைவ இலக்கிய வரலாற்றில் தலபுராணங்களின் தனித்தன்மைகளையும், சிறப்பியல்புகளையும் வேறாகப் பிரித்துக் காணலாம்.
     

    தலபுராணங்களின் தோற்றத்தால் தமிழ் இலக்கிய வரலாற்றிலும், சைவசமய வளர்ச்சி வரலாற்றிலும் ஏற்பட்ட தாக்கங்களை இனங்காணலாம்.
     
    பரஞ்சோதி முனிவரின் மதுரை திருவிளையாடற்புராணத்தின் பன்முகச் சிறப்புகளைத் தொகுத்துக் காணலாம்.
     
    காஞ்சிபுராணம், தணிகைபுராணம் முதலியவற்றின் பெருங்காப்பிய அமைதியைப் பகுப்பாய்வு செய்யலாம்.
     
    மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தலபுராண வளர்ச்சி வரலாற்றில் பெற்றிருக்கும் தனியிடத்தை மதிப்பிடலாம்.
     
    கந்தபுராணம், தலபுராணம் அன்று என்றாலும் புராண அமைதி கொண்ட முருகன் புகழ்பாடும் கந்தபுராணத்தின் அமைப்பையும் அழகையும் இனங்காணலாம்.
     

     

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:17:47(இந்திய நேரம்)