தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 6.8 தொகுப்புரை-6.8 தொகுப்புரை

  • 6.8 தொகுப்புரை

    சைவ இலக்கியங்கள் குறித்த இந்தப் பாடத்தில் தலபுராணங்கள் குறித்த ஒரு சிறு அறிமுகமாகவே இப்பகுதி அமைகிறது. புலமை நலம் மிக்க சைவப் பெருங்கவிஞர்கள் தங்கள் அளப்பரிய புலமைத் திறத்தைத் தாம் பாடிய தல புராணங்களுள் பதிவு செய்துள்ளனர். விளக்கம் காணப்படாத பல புதிர்களுக்கு இவர்கள் விளக்கம் கண்டு காட்டியுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெருங்காப்பியங்கள் அதிகம் காணப்படவில்லை என்ற வறிய நிலையை இத்தகைய தலபுராணங்கள் பெருமளவுக்குப் போக்குகின்றன.

     


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    காஞ்சிப்புராண ஆசிரியர் யார்?
    2.
    காஞ்சிப்புராணம் கூறும் ஒழுக்க விதிகளில் இரண்டினைக் கூறுக.
    3.
    தணிகைப்புராண ஆசிரியருக்கு அமைந்த சிறப்புப் பெயர் என்ன?
    4.
    மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் தலை மாணாக்கர்களில் இருவரைக் குறிப்பிடுக.
    5.
    மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய வேறு இரண்டு தலபுராணங்களின் பெயர்களைத் தருக.
    6.
    சீகாழித் தலபுராணம் யாரால் பாடப்பெற்றது?
புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 10:17:02(இந்திய நேரம்)