தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 4.6-தொகுப்புரை

  • 4.6 தொகுப்புரை


        நல்ல குடியில் பிறந்தவர்கள், மிகவும் எளிமை உடையவர்களாக
    இருப்பார்கள். நல்ல பண்புகளை உடையவர்களாகவும் திகழ்வர்.

        தவறு செய்யாதவர்களாகவும், தன் உழைப்பினால் முன்னேறக்
    கூடியவர்களாகவும், யாருக்கு எது தேவையோ அதை அறிந்து
    உதவுபவர்களாகவும் செயல்படுவர்.

        ஒருவனுக்கு     ஒருத்தி்     என்ற     கற்பொழுக்கத்தைப்
    பின்பற்றுபவர்களாகவும், பணிவுடையவர்களாகவும் அமைவர். நல்ல
    குடியில் பிறந்தவர், எந்தச் சூழலிலும், தனக்கோ, தம்
    குடும்பத்தார்க்கோ கேடுதரக் கூடிய, அல்லது குறை வரக்கூடிய
    எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள். தாம் பின்பற்றும்
    பண்பிலிருந்தும் தவற மாட்டார்கள்.

        நல்ல குடியில் தோன்றியவன் ஒரு சிறு தவறு செய்தாலும், அது
    வானத்திலுள்ள நிலவில் காணப்படும் கறைபோல், எல்லோர்
    கண்ணுக்கும் புலப்படும். சிறப்புடைய குடும்பத்தில் பிறந்தவரிடம்
    அன்பின்மை இருந்தால், அவன் குடியைப் பற்றி ஐயம் ஏற்படும்.

        இவ்வாறு, ஒரு நல்ல குடியில் தோன்றியவனிடம் இருக்கும்
    நற்குணங்களைப் பற்றிக் குடியியல் என்ற தலைப்பில் வள்ளுவர் பல
    கருத்துகளை வழங்கியுள்ளார்.


    தன் மதிப்பீ்டு : வினாக்கள் : II

    1. கற்பைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்து யாது?
    1. யார் துணிவுடன் செயல்படுவர் என்று வள்ளுவர்
      குறிப்பிடுகிறார்?
    1. யார் கேடு விளைவிக்கும் செயல்களைச்
      செய்யமாட்டார்கள்?
    1. நல்ல குடியில் பிறந்தவரது குற்றத்தை வள்ளுவர்
      எதனுடன் ஒப்பிடுகிறார்?
    1. எவருடைய குடியைப் பற்றி ஐயம் ஏற்படும்
      என்கிறார் வள்ளுவர்?
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:55:49(இந்திய நேரம்)