Primary tabs
-
5.7 தொகுப்புரை
தமிழகச் சிற்பக் கலை வரலாற்றின் இறுதிக் காலமே நாயக்கர்
காலம். பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான கலை
வளர்ச்சியில் நாயக்கர் காலச் சிற்பங்கள் உன்னதமான
கலைப் படைப்புகள் ஆகும். அவர்கள் மண்டபங்களை அதிக
அளவில் அமைத்ததோடு, மண்டபங்களில் அதிக அளவில்
சிற்பங்களையும் அமைத்து அழகுபடுத்தினர். சிற்பக் கலைப்
படைப்பில் நாயக்கரது பாணியைத்தான் இன்றுவரை
பின்பற்றுகின்றனர்.
ஓவியத்தைப் பொறுத்த அளவில், இன்று தமிழகத்தில் அதிக
அளவில் கிடைக்கக் கூடியவை நாயக்கர் கால ஓவியங்களே.
தனித்த பாணியை இவர்களது ஓவியங்கள் பெற்று விளங்குகின்றன.
பெரும்பான்மையான ஓவியங்களை மீண்டும்
வரைந்துள்ளமையைக் காண முடிகிறது. ஓவியங்களுக்குக் கீழும்
மேலும் விளக்கம் எழுதுவது நாயக்கர்களது ஓவியக் கலைக்கு
உரிய பாணி எனலாம்.1.நாயக்கரது ஓவியக்கலைப் பாணிக்குப் பெயர் என்ன?2.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற்
புராண ஓவியங்கள் எங்கெங்கு இடம்பெற்றுள்ளன?3.ஓவியத் தொகுதிகளில், ஓவியத்தின் கீழ்
எழுதப்பட்டிருக்கும் விளக்கம் எந்தெந்த மொழிகளில்
அமைந்திருக்கும்?4.அழகர் கோயிலில் உள்ள இராமாயணக் கதை ஓவியம்
எவ்வாறு அமைந்துள்ளது?