தன்மை அணி; எத்தகைய மிகையும் கற்பனையும்
இல்லாமல் ஒரு பொருளின் இயல்புகளை உள்ளபடி
அழகுபடுத்திக் கூறுவதாகும். உவமை அணி, பொருளணிகள்
எல்லாவற்றிலும் தலைசிறந்தது. பிற அணிகள் பலவும்
இதிலிருந்தே தோன்றின; எனவே உவமை அணி தாய் அணி
எனக் கூறப்படும் சிறப்பு
வாய்ந்தது. உவமை அணி, 'பண்பு,
தொழில், பயன்' ஆகிய
ஒப்புமைத்தன்மை காரணமாகத்
தோன்றுவது. உவமை அணியிலிருந்து தோன்றிய முதலாவது
அணி உருவக அணி. இது உவமைக்கும் பொருளுக்கும்
இடையே உள்ள வேற்றுமையை
ஒழித்து இரண்டும் ஒன்றே
என்னும் உணர்வு தோன்றுமாறு
சொல்வது. தண்டியலங்காரத்தில்
கூறப்படாத 'எடுத்துக்காட்டு உவமை அணி' '.ஏகதேச உருவக
அணி' ஆகிய இரண்டும்
இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில்
அமைந்த சில அணிகளும் இடம் பெறுகின்றன. இத்தகைய
அணிகளில் தீவக அணியும் ஒன்று. பாடலில் ஏதேனும்
ஓரிடத்தில் நின்ற சொல்
அப்பாடலின் பல இடங்களிலும்
உள்ள சொற்கேளாடும் சென்று பொருந்திப் பொருள் விளக்கம்
தருவது தீவக அணி. இவையாவும் இப்பாடத்தின் வாயிலாக
அறியப்பட்டன.