Primary tabs
-
4.0 பாட முன்னுரை
தண்டியலங்காரம் காப்பியங்களைப் பெருங்காப்பியம், காப்பியம் என இரு வகையாகப் பிரித்துக் காட்டியது.தண்டியாசிரியருக்கு முன்னமேயே பல்வேறு காப்பியங்கள்தோன்றியிருந்தன. வடமொழியிலிருந்து பெயர்க்கப்பட்டனவாகவும் தமிழ் மொழியிலேயே தோன்றியனவாகவும் அவை இருந்தன.இவற்றையெல்லாம் வகைப்படுத்திக் காட்ட வேண்டிய
தேவையினால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் எனும் பாகுபாடு தோன்றியது. தொடர்ந்து, வகைமைப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.பிற மொழிகளின் தொடர்பாலும் இலக்கிய
ப் போக்கில் பல மாற்றங்கள் விளைந்தன. ஆங்கிலேயரின் ஆட்சியை ஒட்டி அந்த மொழியின் தாக்கத்தாலும் புதிய காப்பியங்கள் தோன்றின. 19ஆம் நூற்றாண்டில் நாடகக் காப்பியங்கள் உருவாகின.புதுக்கவிதையிலும் கதைகூறும் பாடல்கள் அமைந்தன. இவையெல்லாவற்றையும் அறிஞர்கள் வகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுப்புமுறையை இந்தப் பாடத்தில் பார்ப்போம்.