Primary tabs
-
5.2 சிற்றிலக்கியம் - பிரபந்தம்
பாடுபொருளை அடிப்படையாகக் கொண்டே இலக்கியங்கள்
வகைமைப் படுத்தப்பட்டன.வெண்பா இலக்கியங்கள்,விருத்தப்பா இலக்கியங்கள் என்று
யாப்பு வகை கொண்டும் இலக்கியங்கள் வகைப்படுத்தப்பட்டன.முற்காலத்தில் பெரும்காப்பியம், சிறுகாப்பியம் எனும்
இலக்கிய வகைமைகள் இருந்தனவேயன்றி, கி.பி.12 ஆம்
நூற்றாண்டுவரை சிற்றிலக்கியம் என்ற சொல்லாட்சி தமிழில்
இல்லை.முற்கால உரையாசிரியர்களான இளம்பூரணர்,
ம்
நச்சினார்க்கினியர் போன்றோர் பிள்ளைத் தமிழ், கலம்பகம், தூது
போன்ற இலக்கிய வடிவங்களைத் தம் உரைகளில்
குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் அவற்றைச் சிற்றிலக்கியம்
அல்லது பிரபந்தம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இதே
காலத்தில் தண்டியலங்காரம் பெரும்காப்பியம், காப்பிய
என வகைமைப்பாடு செய்திருந்தது. ஆக,சிற்றிலக்கிய வகைப்பாடு
பிற்காலத்தில் தோன்றியது என உணரலாம்.ஒருவரோ பலரோ பாடிய பல பாடல்களைத் தொகுத்து
ஒரே நூலாகக் கட்டப்பட்ட இலக்கியங்களைப் பேரிலக்கியம்
என்று வகைமைப்படுத்தினர்.அதிகமான எண்ணிக்கையில் பாடல்களைப் பெற்ற
தொடர்நிலைச் செய்யுள்களாலான நூல்களைக் கொண்டு
பெருங்காப்பியம் என்ற வகைப்பாட்டினை உருவாக்கினர்.குறைந்த பாடல் எண்ணிக்கையோடு தனித்தனி இலக்கிய
வகைமைகளாய் இருந்த தூது, உலா, கலம்பகம் முதலானவற்றைப்
பேரிலக்கியங்களிலிருந்து வேறுபடுத்த, பிரபந்தங்கள் என
அழைக்கத் தொடங்கினர்.
இலக்கிய வடிவம் என்பதாக அமைகிறது.பிரபந்தம் எனும் வடமொழிச் சொல்லைத் தமிழில் திரட்டு,
தொகுப்பு எனும் பொருளிலேயே முதலில் பயன்படுத்தினர்.
பன்னிரண்டு ஆழ்வார்கள் தந்த நாலாயிரம் பாசுரங்களை
நாலாயிரம் அழகான (இனிமையான) பாடல்களின் தொகுப்பு எனும்
பொருளிலேயே நாதமுனிகள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
எனப் பெயர் சூட்டினார்.ஆக, பிரபந்தம் எனும் சொல் தமிழில் ஒரே நேரத்தில்
இலக்கியம் எனவும், தொகை எனவும் வழங்கப்பட்டதை அறிய
முடிகிறது. தமிழில் அமைந்த பாட்டியல் நூல்களும் பிரபந்தத்தை
இலக்கியம் எனும் பொருளிலேயே வழங்கியுள்ளன. தூது, உலா,
கலம்பகம் உள்ளிட்ட சிறிய இலக்கியங்களை முற்காலத்தோர்
சில்லறைப் பிரபந்தம் என்று வழங்கினர். “பத்தொன்பதாம்
நூற்றாண்டின் இடைப்பகுதியில் தனித்தமிழ் இயக்கம் எழுந்தபோது
சில்லறைப் பிரபந்தம் எனும் பெயருக்குப் பதிலாகத் தனித் தமிழ்ச்
சொல்லான சிற்றிலக்கியம் எனும் பெயர் வழக்கிற்கு வந்தது”என்று
சிற்றிலக்கிய ஆராய்ச்சி எனும் நூலில் டாக்டர் இரா.கண்ணன்
குறிப்பிடுகிறார்.
5.2.2 எண்ணிக்கை
அடியார்க்கு நல்லார் உரையில் இடம் பெற்றுள்ளது” என்று தமிழ்
இலக்கிய வரலாறு நூலில் ஹரி.விஜயலெட்சுமி குறிப்பிடுகிறார்.நல்ல யாப்பில் அமைந்த இலக்கிய வகையைப் பிரபந்தம்
ற கருத்து இன்று
என்றனர்.சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் என்
பரவலாக நிலவி வருகிறது. கி.பி. 17ஆம் நூற்றாண்டிலிருந்து,
பிரபந்தங்கள் 96 வகைப்படும் என்றே தமிழ்ப் புலவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.· படிக்காசுப் புலவரின் கருத்து (கி.பி.1682-கி.பி.1723)
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவர் தமது
ப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்” என, பிரபந்தங்களை 96
சிவந்தெழுந்த பல்லவன் உலா எனும் நூலில், “தொண்ணூற்றாறு
கோல
என்று குறிப்பிடுகிறார்.ஆக 96 என்ற எண் வரையறை கி.பி. 17ஆம்
நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ தமிழில் தோன்றியது
எனலாம்.· வீரமாமுனிவரின் கருத்து
கி.பி.17ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த இத்தாலி
க் கிறித்தவத் துறவி வீரமாமுனிவர். தாம் எழுதி வெளியிட்ட
நாட்டு
சதுரகராதியில் 96 வகைப் பிரபந்தங்களைப் பட்டியல் இடுகிறார்.
ஆனால் அதற்கு முன்னர் அவர் எழுதிய தொன்னூல் விளக்கம்
எனும் நூலில் 93 இலக்கிய வகைமைகளை மட்டும் சுட்டுகிறார்.· பாட்டியல் நூலில் எண் வரையறை
கி.பி. 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல்
எனும் பாட்டியல் நூலின் நூற்பா, பிரபந்தங்கள் 96 என்றே
காட்டியுள்ளது.வானவர் ஏத்தும் மறையோர் முதலிய
மக்களின் னோர்க்குத் தக்க தன்மையிற்
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற் றாறெனும் தொகைய தான
முற்பக ரியல்பை முன்னுறப் பாடும்
பிரபந்த மரபியலது பிரபந்த மரபியலே
- (பிரபந்த மரபியல்-1)(ஏத்தும் = புகழும், பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாக
= பிள்ளைத் தமிழ் முதல் புராணங்கள் வரை)· பிரபந்த தீபிகையில் எண் வரையறை
19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த தீபிகை எனும் பாட்டியல் நூலும் பிரபந்தங்கள் 96 வகைப்படும் என்றே குறிப்பிடுகிறது.
· பிற பாட்டியல் நூல்களில் எண் வரையறை
1) பன்னிரு பாட்டியல் (காலத்தால் முற்பட்டது)
68 இலக்கிய வகைகளின் இலக்கணம் மொழிந்துள்ளது.
2) வெண்பாப் பாட்டிய
குணவீர பண்டிதர் எழுதிய வெண்பாப் பாட்டியல் பிரபந்தங்கள் 58 என்கிறது (காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு).3) நவநீதப் பாட்டியல்
நவநீத நடனார் எழுதிய நவநீதப் பாட்டியல் இலக்கிய வகைகள் (பிரபந்தங்கள்) 52 என்கிறது (காலம் கி.பி.14ஆம் நூற்றாண்டு).
4) சிதம்பரப் பாட்டியல்
பரஞ்சோதி முனிவரால் எழுதப் பெற்ற சிதம்பரப் பாட்டியல் இலக்கிய வகைகள் 69 என்று கூறுகிறது (காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு).
5) இலக்கண விளக்கப் பாட்டியல்
வைத்தியநாத தேசிகரால் எழுதப் பெற்ற இலக்கண விளக்கப் பாட்டியல் என்னும் நூல், இலக்கிய வகைகள் 66 என்கிறது (காலம் 17ஆம் நூற்றாண்டு).
6) முத்து வீரியம்
முத்துவீர உபாத்தியாயர் எழுதிய முத்து வீரியம் எனும் நூலின் யாப்பதிகாரத்தின் ஒழிபியலில் 96 வகை இலக்கிய வகைகளின் இலக்கணம் கூறப் பெற்றுள்ளது (காலம் 19ஆம் நூற்றாண்டு).
7) சுவாமி நாதம்சுவாமி கவிராயர் எழுதிய இந்நூலில் 45 இலக்கிய வகைகள்குறிப்பிடப்படுகின்றன (காலம் கி.பி.19ஆம் நூற்றாண்டு).
8) பிரபந்த தீபம்
இந்நூல் 95 இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகிறது (காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு).
9) பிரபந்தத் திரட்டு
119 இலக்கிய வகைகளை இந்நூல் குறிப்பிடுகின்றது (காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு).
10) சம்பந்தப் பாட்டியல்சம்பந்த முனிவர் எழுதிய இந்நூலில் இலக்கிய வகைகளின் எண்ணிக்கை இல்லை.
பாட்டியல் - பட்டியல்
எண்பாட்டியல் நூலின்
பெயர்எழுதியவர்எண்ணிக்கைகாலம்1.பன்னிரு பாட்டியல்
682.வெண்பாப்
பாட்டியல்
குணவீர
பண்டிதர்
58கி.பி.133.நவநீதப் பாட்டியல்
நவநீத
நடனார்
52கி.பி.144.சிதம்பரப் பாட்டியல்
பரஞ்சோதி
முனிவர்
69கி.பி.165.இலக்கண விளக்கப்
பாட்டியல்
வைத்தியநாத
தேசிகர்
66கி.பி.176.பிரபந்த மரபியல்
-96கி.பி.16
அல்லது
கி.பி.177.முத்துவீரியம்
முத்துவீர
உபாத்தியாயர்
96கி.பி.198.தொன்னூல்
விளக்கம்
வீரமாமுனிவர்
93கி.பி.179.பிரபந்த தீபிகை
முத்துவேங்கட
சுப்பையர்
98கி.பி.1910.சுவாமி நாதம்
சுவாமி
கவிராயர்
45கி.பி.1911.பிரபந்த தீபம்
-95கி.பி.1912.பிரபந்தத் திரட்டு
-119கி.பி.1913.சம்பந்தப் பாட்டியல்
சம்பந்த
முனிவர்
--· தொண்ணூற்றாறு என்ற வரையறை
13 பாட்டியல் நூல்களுள் பிரபந்த மரபியல் (96), முத்துவீரியம் (96),தொன்னூல் விளக்கம் (93),பிரபந்த தீபிகை (98), பிரபந்த தீபம் (95), பிரபந்தத் திரட்டு (119) எனும் ஆறு நூல்கள் தொண்ணூற்றுக்கு மேலாக இலக்கிய வகைகளை முன்வைத்த நூல்கள்.
தமிழறிஞர் ச.வே.சு. 201 இலக்கிய வகைகளை முன்வைக்கிறார். அறிஞர் ந.வீ.ஜெயராமன் தமது சிற்றிலக்கியத் திறனாய்வு எனும் நூலில் 331 சிற்றிலக்கிய வகைகளைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரபந்தங்கள் என்று அழைக்கப்படும் சிற்றிலக்கியங்கள் 96 என நிலைபெற்று விட்டது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I9.“தொண்ணூற்று ஆறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான்” என்று தமிழ்ப் பிரபந்தங்களை 96 என வரையறுத்ததை முதலில் குறிப்பிட்டவர் யார்?