தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டிய நாடகங்கள்

  • D06144 நாட்டிய நாடகங்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

        ஒரு கதையைத் தழுவி, ஆட்டமும் பாடலுமாக அமைந்ததே நாட்டிய நாடகம் என்று அதன் இலக்கணத்தை இப்பாடம் எடுத்துக் கூறுகிறது.

         நாட்டிய நாடகம் பற்றிய பழைய இலக்கியக்  குறிப்புகளை விரித்துச் சொல்கிறது.

         நாட்டிய நாடகங்களின் வகைகளைப் பட்டியலிடுகிறது.

         பாடுபொருள்,     வடிவம்     ஆகியவற்றின்  அடிப்படையிலேயே இந்த வகைப்பாடுகள் அமைகின்றன  என்பதைக் காட்டுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • நாட்டிய நாடகத்தின் இலக்கணத்தை அறியலாம்.

    • அந்த நாடகங்களின் பல வகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • பழைய இலக்கியங்கள் இவ்வகை நாடகங்களைப் பற்றிப்  பேசுகின்றன என்பதை அறியலாம்.

    • பாடுபொருளும் வடிவமுமே நாட்டிய நாடகங்களைப்  பிரித்துப் பார்ப்பதற்கான காரணங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:02:55(இந்திய நேரம்)