Primary tabs
-
D06143 செவ்வியல் ஆடல்கள்
ஆடற்கலை நுட்பங்களில் செவ்வியல் ஆடல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது. செவ்வியல் ஆடல்களில் தற்போது பெருவழக்கில் உள்ள பரத நாட்டியம், கதகளி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, பாகவத மேளம், மணிப்புரி ஆடல்கள் பற்றி எடுத்துரைக்கின்றது.
இந்த ஆடல்களில் காணப்படும் பயிற்சிமுறை, அலங்கார முறைகள் பற்றிக் கூறுகின்றது. இந்த ஆடற்கலையில் பங்குபெறும் இசைக்கருவிகள் பற்றித் தெரிவிக்கின்றது.
ஆடல் நிகழ்வுகளைக் கண்டு களிப்பவர்களுக்கு அவைகளின் தன்மைகள் பற்றிக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
செவ்வியல் ஆடல்களின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
-
பரதநாட்டியம், கதகளி, மோகினி ஆட்டம், குச்சுப்புடி, பாகவத மேளம், மணிப்புரி, ஆடல்களில் காணப்படும் ஒப்புமைகளை உணர்ந்து கொள்ளலாம். இவ்வகை ஆடல்களைக் கற்கலாம். கற்கும் பொழுது அறிந்து கொள்ள வேண்டிய நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம்.
-
இவ்வகை ஆடல்களுக்குரிய ஒப்பனை முறை, இசைக்கருவிகளின் அவசியம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
-
இந்திய எழிற்கலை பற்றி அறியலாம். தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கலைகளின் பங்கு பற்றி உணர்ந்து கொள்ளலாம்.
-