Primary tabs
-
D06145 குறவஞ்சி நாட்டிய நாடகங்கள்
இயல் இசை நாடகம் என்னும் மூன்றையும் இணைத்து உருவானது நாட்டிய நாடகம் என்பதனையும், அவை குறம், குறவஞ்சி, குளுவம் எனும் பெயர்களால் அழைக்கப்பட்டன என்பதனையும் தெரிவிக்கிறது.
இம்மூன்றும் இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இப்பாடம் இனம் காட்டுகின்றது.
குறவஞ்சி இலக்கியம், குறவஞ்சி நாட்டிய நாடகம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறுகிறது. எடுத்துக்காட்டும் தருகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?-
குறம், குறவஞ்சி முதலிய இலக்கிய வடிவங்களை இனம் காணலாம்.
-
அவற்றின் இலக்கணங்கள் அறியலாம்.
-
குறவஞ்சி நாட்டிய நாடகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அரசர், வள்ளல், இறைவன், ஊர் முதலியவற்றின் அடிப்படையில் அவை பெயர் பெறும் என்பது தெளிவாகும்.
-
அவை மேடை ஏற்றப்பட்ட விவரங்களை அறியலாம்.
-