தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆடற்கலை இலக்கண நூற்கள்

  • D06146 ஆடற்கலை இலக்கண நூற்கள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
    E

        ஆடலுக்குரிய இலக்கண நூற்கள் பல இருந்தன. இவைகளில் பல இறந்துவிட்டன. உரையாசிரியர்கள் இந்நூற்களைப் பற்றியும், இந்நூற்களின் நூற்பாக்களையும் ஆங்காங்கே பயன்படுத்தியுள்ளனர். இவைகளின் மூலம் பண்டைய ஆடல் இலக்கண நூற்கள் பற்றி அறியும் வாய்ப்புள்ளதனை இந்தப் பாடம் கூறுகிறது.

        பண்டைய ஆடல் இலக்கண நூற்களில் கூத்த நூல், பஞ்ச மரபு, மகாபரத சூடாமணி, அவிநய தர்ப்பணம் என்ற நூற்கள் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவைகளில்  காணப்படும் ஆடல் இலக்கணங்களை, நெறிமுறைகளை இப்பாடம் எடுத்துணர்த்தியுள்ளது.

        சிலப்பதிகாரம் ஒருவகையில் ஆடல் இலக்கியமாகவும், அதே நேரத்தில் ஆடல் இலக்கண நூலாகவும் அமைந்துள்ள நிலையை இந்தப் பாடம் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • இந்தப் பாடத்தைப் படிப்பதால் தொன்மைக் காலத்தில் ஆடல் இலக்கண     நூற்கள் இருந்தமையையும், பிற்காலத்தில் இவ்வகை     இலக்கண நூற்கள்தோன்றியமையையும் அறிந்து இன்புறலாம்.

    • ஆடலுக்குரிய இலக்கண நூற்கள் வாயிலாக ஆடல் நிலைகள், ஆடல் வகைகள், ஆடல் அமைதிகள் போன்ற பல நிலைகளைப் பற்றித் தெளிவாக அறியலாம்.காலந்தோறும் வளர்ந்து வரும் சமுதாய நிகழ்வுகள், செய்திகள் போன்றவற்றையும் இலக்கண நூற்கள் குறிப்பிட்டுள்ள திறன் அறிந்து மகிழலாம்.

    • இலக்கியமாகவும், இலக்கணமாகவும் ஆடற்கலை உள்ள நிலையறிந்து இக்கலை பிறமொழியிலிருந்து பெற்றதன்று, தமிழ்மொழிக்குரியது என்று அறிந்து பெருமை கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 00:05:38(இந்திய நேரம்)