தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கப்பல் பாட்டு

  • கப்பல் பாட்டு

    முனைவர் சி.சுந்தரேசன்
    துறைத்தலைவர்
    நாட்டுப்புறவியல் துறை

    திருநெல்வேலி மாவட்டத்தில் கப்பல் பாட்டு என்ற நாட்டுபுறக்கலை முன்பு வழக்கத்திலிருந்த்து. விழாக்களின் போதும் சில நேரங்களில் தனி நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட்டிருக்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் பெண்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலும் நிகழ்ச்சியை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

    ஓடம் போன்ற அமைப்புடைய கூண்டுவண்டியில் அமர்ந்து கொண்டு இந்தக் கலை நடத்தப்பட்டதால் கப்பல் பாட்டு என்றும், ஓடப்பாட்டு என்றும் அழைக்கப்பட்டது. மூன்று ஆண்கள் சேர்ந்து இந்தக் கலையை நடத்தி இருக்கிறார்கள். இளம் வயதுக்காரர், பருவ வயதினர். நடுநிலை வயதினர், முதியோர் என ஆண்களே பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். இளம் வயதினர் மருமகனாகவும் கொஞ்சம் வயது கூட உள்ளவர் மாமியார் வேடத்திலும் நகைச்சுவைக்காகவே கோமாளியாகவும் வேடமேற்று நடித்திருக்கின்றனர்.

    கப்பல் பாட்டுக்குப் பின்னணி இசை இல்லை. உரையாடல் கலந்த பாட்டுகளைப் பாடி நடித்திருக்கிறார்கள். மாமியாரும் மருமகனும் பாடல்கள் பாடுவர். அதற்கு கோமாளி வேடத்திலிருப்பவர் விளக்கமளிப்பார். ஆனால் இரட்டைப் பொருளுடைய உரையாடலும் ஆபாச பாலியல் செய்திகளடங்கிய பாடல்களும் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

    இதனால்தான் ஒதுக்குப்புறமான இடத்தில் கப்பல் பாட்டு நிகழ்ச்சியை நடத்திருக்கிறார்கள். தற்போது இந்தக் கலை வழக்கத்தில் இல்லை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2017 16:41:10(இந்திய நேரம்)