| 1. | 
      ▪ இளையோன்  | 
      - இளையவன் (இங்கு இலக்குவனைக் குறிக்கும்) | 
       
	   
	   | 
      ▪ இறைஞ்சினான்  | 
      -  (குகன்) வணங்கினான். | 
      
	  
	   | 
      ▪ கழல்  | 
      - பாதம் (திருவடி) | 
      
    
	  
	   | 
      ▪ குறுகி  | 
      -  (இலக்குவன் குகனைச்) சென்றடைந்து | 
      
    
	  
	   | 
      ▪ சேவிக்க வந்தனன்  | 
      - வணங்க வந்தேன்.  | 
    
	
	   | 
      ▪ நாய் அடியேன்  | 
      - நாய் போன்ற கீழான அடியவன் (அன்பினால் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பணியும் மரபு) | 
      
	  
		 | 
      ▪ நாவாய் வேட்டுவன்  | 
      - படகுகளை உடைய வேடன் | 
     
	 | 
      ▪ வினவ  | 
      - கேட்க | 
    
	
	 | 
      ▪ கூவா முன்னம்   | 
      - குகன் அழைப்பதற்கு முன்னமே | 
     
	
	 | 
      ▪ கூவு  | 
      - கூப்பிடு (call) , அழை | 
    
	
	 | 
      ▪ வருதல்  | 
      - வாழ்தல் | 
      
	| 2. | 
      ▪ இறை  | 
      - அரசன் (சான்றோன்) | 
     
    
	 | 
      ▪ எற்றுநீர்க் கங்கை  | 
      - அலைகள் வந்து எற்று(மோது)கின்ற கங்கை | 
     
    
       | 
      ▪ கொற்றவ | 
      -	மன்னவ(ர்) | 
     
    
	 | 
      ▪ நிற்றி ஈண்டு  | 
      -	இங்கு நில் | 
      
    
       | 
      ▪ நின்னை  | 
      -	உன்னை | 
       
	
	 | 
      ▪ நெடியவன் தொழுது  | 
      -	நெடியவனாகிய இராமனைத் தொழுது நிறை, முழுமை  | 
    
    
       | 
      ▪ புக்கு  | 
      -	புகுந்து  | 
     
    
	 | 
      ▪ தம்பி | 
      - இராமனது தம்பி (இலக்குவன்) | 
     
	 
    
      | 3. | 
      ▪ நின்னைக் காணக் குறுகினன்  | 
      - உன்னைக் காண்பதற்காக விரைந்து வந்துள்ளான் | 
     
	
	 | 
	▪ அண்ணல் | 
	- இராமன் | 
	
	 
	
  | 
 ▪ கண்ண(ன்)  | 
 - இராமன் (கண் அழகுடையவன்) |  
 
 
  | 
 ▪ பண்ணவன் | 
 - பண்பில் சிறந்தவன் (இலக்குவன்) |  
 
 
  | 
 ▪ பரிவினன்  | 
 - அன்பு உடையவன் (குகன்) | 
 
 
  | 
 ▪ மண்உறப் பணிந்து  | 
 - மண்ணில் (பூமியில் விழுமாறு) விழுந்து வணங்கி | 
 
 
  | 
 ▪ என்பால் அழைத்தி  | 
 -  என்னிடம் அழைத்து வருக | 
 
 
  | 
 ▪ மேனி வளைத்து | 
 - உடலை வளைத்து | 
 
 
  | 
 ▪ வாய் புதைத்து நின்றான் | 
 -  தனது வலது கையால் வாயினைப் பொத்திப் பணிவாக நின்றான். | 
 
 
 | 4. | 
 ▪ ஈண்டு இருத்தி   | 
 -  இங்கே அமர்க (உட்காரவும்) | 
 
 
  | 
 ▪ என்னலோடும் | 
 - என்று (இராமன்) கூறியபோதும் | 
 
 
  | 
 ▪ எல்லை நீத்த அருத்தியன்   | 
 -  அளவு கடந்த அன்பு உடையவன் (குகன்) | 
 
 
  | 
 ▪ அமுதினுக்கு  | 
 -  உணவினுக்கு | 
 
 
   | 
 ▪ உன்கொல் திருவுளம்?  | 
 -  த(உ)ங்கள் விருப்பம் எப்படியோ? (அப்படியே) | 
 
  
   | 
 ▪ வீரன்  | 
 -  இந்த இடத்தில் இராமனைக் குறிக்கும். | 
 
  
   | 
 ▪ விருத்தமாதவர்  | 
 -   (வயது) முதிர்ந்த (மூத்த) பெருந்தவம் உடையவர்கள் (முனிவர்கள்)  | 
 
 
  | 
 ▪ முறுவலன்  | 
 -  புன்னகை புரிந்தவனாக | 
 
 
 
 | 5. | 
 ▪ விளம்பல் உற்றான்   | 
 -   சொல்லத் தொடங்கினான். | 
 
 
  | 
 ▪ அரிய  | 
 -  அருமையான (பொருட்கள்) (குகன் கொண்டு வந்த தேனும், மீனும்) | 
 
 
  | 
 ▪ தாம் உவப்ப  | 
 -  தாம் மகிழ்வதற்கானவை | 
 
 
  | 
 ▪ உள்ளத்து அன்பினால்   | 
 -  மனத்தில் இருக்கின்ற அன்பினால் | 
 
 
  | 
 ▪ காதல் தெரிதரக் கொணர்ந்த   | 
 -  (உள்ள) அன்பு வெளியில் தெரிவது போலக் கொண்டுவந்த இவை. | 
 
 
  | 
 ▪ அமிழ்தினும் சீர்த்த அன்றே?   | 
 -  அமுதைவிடச் சிறந்ததாகும், அல்லவா? | 
 
 
  | 
 ▪ பரிவினில்   | 
 -  அன்பினில் | 
 
 
  | 
 ▪ தழீஇய என்னில்   | 
 -  கொண்டுவரப்பட்டது என்றால் | 
 
  
  | 
 ▪ பவித்திரம்   | 
 -  புனிதம் (தூய்மையானவை) | 
 
 
  | 
 ▪ எம்மனோர்க்கும்   | 
 -  என்போன்ற (தவம் புரிபவர்களுக்கும்) | 
 
 
  | 
 ▪ இனிதின் நாமும் உண்டெனம்   | 
 -  இனிமையாக நாமும் உண்டது போலாகும் (இராமன் தவவேடம் பூண்டு கானகம் வந்திருப்பதால், அவனும் தவம் புரிபவன் ஆகிறான். ஆதலால் மீன் முதலான உணவுகளை உண்ணக் கூடாது. அதனால், குகன் கொண்டு வந்ததை உண்டதுபோல ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறுகின்றான்) |