3. காப்பிய இலக்கியம்

காப்பிய இலக்கியம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கம்பர் பிறந்த ஊர் -------------- ஆகும்.

கம்பர் பிறந்த ஊர் தேரழுந்தூர் ஆகும்.

2.  நாவாய்க்கு இறை ----------- ஆவான்.

நாவாய்க்கு இறை குகன் ஆவான்.

3.  கம்பராமாயணம் ------------ காண்டங்களை உடையது.

கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.

4.  எல்லை கடந்த அன்புடையவன் -------------- ஆவான்.

எல்லை கடந்த அன்புடையவன் குகன் ஆவான்.

5.  கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப் பெறுபவர்கள் ----------, -------- . ஆவர்.

கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப் பெறுபவர்கள் கம்பர், ஒட்டக்கூத்தர் ஆவர்.

6.  கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை இயற்றியவர் ------------ ஆவார்.

கம்பராமாயணத்தின் ஏழாம் காண்டத்தை இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார்.

7.  இராமனுக்குத் ---------, ----------- குகன் உணவாகக் கொடுத்தான்.

இராமனுக்குத் தேனையும், மீனையும் குகன் உணவாகக் கொடுத்தான்.

8.  இராமனுடைய சிற்றன்னையின் பெயர் ---------.

இராமனுடைய சிற்றன்னையின் பெயர் கைகேயி.

9.  கம்பராமாயணத்தில் தாயைவிட நல்லவன் -----------.

கம்பராமாயணத்தில் தாயைவிட நல்லவன் குகன்.

10.  நட்பினால் உண்டான உறவை ---------- அழகாக நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

நட்பினால் உண்டான உறவை கம்பராமாயணம் அழகாக நமக்கு விளக்கிக் காட்டுகிறது.