2. அற இலக்கியம்

காப்பிய இலக்கியம்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  இராமனுக்கு உணவாகக் குகன் கொண்டு வந்தவை யாவை?

இராமனுக்கு உணவாகக் குகன் கொண்டு வந்தவை தேனும் மீனும் ஆகும்.

2.  இராமனின் பெற்றோர் பெயர்களை எழுதுக.

இராமனின் பெற்றோர்கள் தசரதன், கோசலை.

3.  தாயினும் நல்லான் என்று இலக்குவன் யாரைக் குறிப்பிடுகின்றான்?

தாயினும் நல்லான் என்று இலக்குவன் குகனைக் குறிப்பிடுகின்றான்.

4.  புனிதமானவை என்று இராமன் எதனை ஏற்றுக் கொண்டான்?

குகன் கொணர்ந்த தேனையும் மீனையும் புனிதமானவை என்று இராமன் ஏற்றுக் கொண்டான்.

5.  கம்பராமாயணத்தில் இரண்டாவது காண்டமாக அமைவது யாது?

கம்பராமாயணத்தில் இரண்டாவது காண்டமாக அமைவது அயோத்தியா காண்டம் ஆகும்.

6.  ஒட்டக்கூத்தர் எழுதிய காண்டத்தின் பெயர் என்ன?
ஒட்டக்கூத்தர் எழுதிய காண்டத்தின் பெயர் உத்தர காண்டம்.

7.  பெருங்காப்பியத்திற்கு உறுதிப் பொருள்கள் யாவை?

பெருங்காப்பியத்திற்கு உறுதிப் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகும்.

8.  கம்பரை ஆதரித்த வள்ளலின் பெயர் என்ன?

கம்பரை ஆதரித்த வள்ளலின் பெயர் சடையப்ப வள்ளல்.

9.  அன்பின் ஆழத்தையும் உயரத்தையும் எதனைக் கொண்டு குகன் உணர்த்திவிடுகின்றான்?

அன்பின் ஆழத்தையும் உயரத்தையும் குகன் தான் கொண்டு வந்த பொருள்களின்மூலம் உணர்த்தி விடுகின்றான்.

10.  பசி அறிந்து உணவு படைப்பவள் யார்?

பசி அறிந்து உணவு படைப்பவள் தாய்.