காப்பிய இலக்கியம்
பயிற்சி - 3
Exercise 3
1. கம்பர் எந்நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பாண்டிய
ஆ) சோழ
இ) சேர
ஆ) சோழ
2. நாவாய் என்பது என்ன?
அ) இசைக்கருவி
ஆ) அணிகலன்
இ) படகு
இ) படகு
3. கம்பரின் காலம் எது?
அ) பன்னிரண்டாம் நூற்றாண்டு
ஆ) ஏழாம் நூற்றாண்டு
இ) ஒன்பதாம் நூற்றாண்டு
அ) பன்னிரண்டாம் நூற்றாண்டு
4. வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?
அ) கம்பர்
ஆ) இளங்கோவடிகள்
இ) வால்மீகி
இ) வால்மீகி
5. குகனின் ஊர்ப்பெயர் என்ன?
அ) அயோத்தி
ஆ) சிருங்கிபேரம்
இ) காசி
ஆ) சிருங்கிபேரம்
6. கம்பருக்குச் சமமான புலவர் யார்?
அ) இளங்கோவடிகள்
ஆ) திருத்தக்கதேவர்
இ) ஒட்டக்கூத்தர்
இ) ஒட்டக்கூத்தர்
7. பெருங்காப்பிய உறுதிப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க.
அ) அறம், பொருள், இன்பம்
ஆ) அறம், பொருள், வீடு
இ) அறம், பொருள், இன்பம், வீடு
இ) அறம், பொருள், இன்பம், வீடு
8. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
அ) பாரி
ஆ) குமணன்
இ) சடையப்ப வள்ளல்
இ) சடையப்ப வள்ளல்
9. இராமன் குகனிடம் பெற்ற உணவு எது?
அ) பாலும் பழமும்
ஆ) தினையும் தேனும்
இ) தேனும் மீனும்
இ) தேனும் மீனும்
10. இராமனுடன் காட்டுக்குச் சென்றவர் எவர்?
அ) பரதன், இலக்குவன்
ஆ) இலக்குவன், சீதை
இ) கோசலை, இலக்குவன்
ஆ) இலக்குவன், சீதை