|
5
மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
|
|
|
||
|
[
மணிமேகலை உதயகுமரன்பால் |
|
|
||
|
||
|
|
|
|
||
|
இளங்கோன் கண்ட இளம்பொன் பூங்கொடி |
|
|
விளங்குஒளி மேனி விண்ணவர் வியப்பப் |
|
|
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத் |
|
|
திருவின் செய்யோள் ஆடிய பாவையின் |
|
5
|
விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து |
|
|
||
|
உருவி லாளனொடு உருவம் பெயர்ப்ப |
உரை |
|
ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் |
|
|
காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து |
|
|
தாழ்ஒளி மண்டபம் தன்கையில் தடைஇச் |
|
10
|
சூழ்வோன் சுதமதி தன்முகம் நோக்கிச் |
|
|
||
|
சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன |
|
|
எத்திறத் தாள்நின் இளங்கொடி உரைஎனக், |
உரை |
|
குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின் |
|
|
முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் |
|
15
|
பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை |
|
|
||
|
ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி |
|
|
காமன் கடந்த வாய்மையள் என்றே |
|
|
தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப, |
உரை |
|
சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ |
|
20
|
நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் |
|
|
||
|
செவ்வியள் ஆயின்என் செவ்வியள் ஆகென |
|
|
அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை |
|
|
அம்செஞ் சாயல் அராந்தா ணத்துள்ஓர் |
|
|
விஞ்சையன் இட்ட விளங்குஇழை என்றே |
|
25
|
கல்என் பேரூர்ப் பல்லோர் உரையினை |
|
|
||
|
ஆங்குஅவர் உறைவிடம் நீங்கி ஆயிழை |
|
|
ஈங்குஇவள் தன்னோடு எய்தியது உரைஎன, |
உரை |
|
வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி |
|
|
தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி |
|
30
|
ஈங்குஇவள் தன்னோடு எய்திய காரணம் |
|
|
||
|
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள் |
உரை |
|
யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன் |
|
|
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன் |
|
|
மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன் |
|
35
|
பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய |
|
|
என்கெடுத்து இரங்கித் தன்தக வுடைமையின் |
|
|
குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப் |
|
|
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன் |
|
|
கடல்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய |
|
40
|
வடமொழி யாளரொடு வருவோன் கண்டுஈங்கு |
உரை |
|
||
|
யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே |
|
|
தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்துஆங்கு |
|
|
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும் |
|
|
காதலன் ஆதலின் கைவிட லீயான் |
|
45
|
இரந்து ஊண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில் |
|
|
||
|
பரந்துபடு மனைதொறும் திரிவோன் ஒருநாள், |
உரை |
|
புனிற்றுஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் |
|
|
கணவிரி மாலை கைக்கொண் டென்ன |
|
|
நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி |
|
50
|
என்மகள் இருந்த இடமென்று எண்ணித் |
|
|
||
|
தன்உறு துன்பம் தாங்காது புகுந்து |
|
|
சமணீர் காள்நும் சரண்என் றோனை |
உரை |
|
இவண்நீர் அல்லஎன்று என்னொடும் வெகுண்டு |
|
|
மைஅறு படிவத்து மாதவர் புறத்துஎமைக் |
|
55
|
கைஉதிர்க் கோடலின் கண்நிறை நீரேம் |
|
|
||
|
அறவோர் உளீரோ ஆரும்இ லோம்எனப் |
|
|
புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற, |
உரை |
|
மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம் |
|
|
அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் |
|
60
|
கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் |
|
|
||
|
பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன் |
|
|
என்உற் றனிரோ என்றுஎமை நோக்கி |
|
|
அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் |
|
|
அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்துத் |
|
65
|
தன்கைப் பாத்திரம் என்கைத் தந்துஆங்கு |
|
|
||
|
எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க |
|
|
எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலைஏற்றி |
|
|
மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் |
|
|
சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி |
|
70
|
சங்க தருமன் தான்எமக்கு அருளிய |
உரை |
|
||
|
எம்கோன் இயல்குணன் ஏதம்இல் குணப்பொருள் |
|
|
உலக நோன்பின் பலகதி உணர்ந்து |
|
|
தனக்குஎன வாழாப் பிறர்க்குஉரி யாளன் |
|
|
இன்பச் செவ்வி மன்பதை எய்த |
|
75
|
அருள்அறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் |
|
|
|
|
|
அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டிக் |
|
|
காமன் கடந்த வாமன் பாதம் |
|
|
தகைபா ராட்டுதல் அல்லது யாவதும் |
|
|
மிகைநா இல்லேன் வேந்தே வாழ்கென, |
உரை |
80
|
அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன் |
|
|
||
|
வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் |
|
|
சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று |
|
|
அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின், |
|
|
பளிக்குஅறை திறந்து பனிமதி முகத்துக் |
உரை |
85
|
களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக் |
|
|
||
|
கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள் |
|
|
வருணக் காப்புஇலள் பொருள்விலை யாட்டிஎன்று |
|
|
இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது |
|
|
புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம் |
|
90
|
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை |
|
|
||
|
இதுவே ஆயின் கெடுகதன் திறம்என |
|
|
மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான் |
|
|
சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள், |
உரை |
|
இந்திர கோடணை விழாஅணி விரும்பி |
|
95
|
வந்து காண்குறூஉம் மணிமே கலாதெய்வம் |
|
|
||
|
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகி |
|
|
மணிஅறைப் பீடிகை வலம்கொண்டு ஓங்கிப் |
|
|
புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன் |
உரை |
|
உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ! |
|
100
|
குற்றம் கெடுத்தோய் செற்றம் செறுத்தோய் |
|
|
||
|
முற்ற உணர்ந்த முதல்வா என்கோ! |
|
|
காமன் கடந்தோய் ஏமம் ஆயோய் |
|
|
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ! |
|
|
ஆயிர ஆரத்து ஆழியன் திருந்தடி |
|
105
|
நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்என்று |
|
|
||
|
எரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து |
|
|
ஒருதனி திரிவதுஒத்து ஓதியின் ஒதுங்கி |
|
|
நிலவரை இறந்துஓர் முடங்குநா நீட்டும், |
உரை |
|
புலவரை இறந்த புகார்எனும் பூங்கொடி |
|
110
|
பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் |
|
|
||
|
புள்ஒலி சிறந்த தெள்அரிச் சிலம்புஅடி |
|
|
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை |
|
|
வாயில்மருங்கு இயன்ற வான்பணைத் தோளி |
|
|
தருநிலை வச்சிரம் எனஇரு கோட்டம் |
|
115
|
எதிர்எதிர் ஓங்கிய கதிர்இள வனமுலை |
|
|
||
|
ஆர்புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி |
|
|
ஊழி எண்ணி நீடுநின்று ஓங்கிய |
|
|
ஒருபெருங் கோயில் திருமுக வாட்டி |
உரை |
|
குணதிசை மருங்கில் நாண்முதிர் மதியமும் |
|
120
|
குடதிசை மருங்கில் சென்றுவீழ் கதிரும் |
|
|
வெள்ளிவெண் தோட்டொடு பொன்தோ டாக |
|
|
எள்அறு திருமுகம் பொலியப் பெய்தலும் |
உரை |
|
அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய |
|
|
தன்உறு பெடையைத் தாமரை அடக்கப் |
|
125
|
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு |
|
|
||
|
ஓங்குஇருந் தெங்கின் உயர்மடல் ஏற |
|
|
அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச் |
|
|
சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்பப் |
|
|
பவளச் செங்கால் பறவைக் கானத்துக் |
|
130
|
குவளை மேய்ந்த குடக்கண் சேதா |
|
|
||
|
முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்பக் |
|
|
கன்றுநினை குரல மன்றுவழிப் படர |
|
|
அந்தி அந்தணர் செந்தீப் பேணப் |
|
|
பைந்தொடி மகளிர் பலர்விளக்கு எடுப்ப |
|
135
|
யாழோர் மருதத்து இன்னரம் புளரக் |
|
|
||
|
கோவலர் முல்லைக் குழல்மேல் கொள்ள |
|
|
அமரக மருங்கில் கணவனை இழந்து |
|
|
தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் |
|
|
கதிர்ஆற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு |
|
140
|
அந்தி என்னும் பசலைமெய் யாட்டி |
|
|
||
|
வந்துஇறுத் தனளால் மாநகர் மருங்குஎன். |
உரை |
|
||
|
மணிமேகலாதெய்வம் வந்து
தோன்றிய காதை |
|