1. நகர்
கண்டது
|
இதன்கண் : உதயணன்
வாசவதத்தையொடு கேளிர் நகரமாகிய சயந்தியை அடைதலும், அவர் வருதலை உணர்ந்த
அந்நகரமாந்தர் மகிழ்ந்து நகரத்தை ஒப்பனை செய்து பெரு வாயிலின்கண் மங்கலப் பொருள்
ஏந்தி வந்து எதிர்கொள்ளுதலும், அம்மாந்தர் உதயணனைப் பாராட்டி வரவேற்றலும்
வாசவதத்தையைப் புகழ்ந்து பாராட்டுதலும், உதயணன் வாசவதத்தையோடு உஞ்சையினின்றும்
வெளிபபட்டுச் சயந்தி புதற்குப் பற்பல உதவியுஞ் செய்த யூகி என்னும் அமைச்சனைப்
படர்க்கையில் வைத்துப் பாராட்டி வாழ்த்துதலும், இங்ஙனமாக உதயணன் வாசவதத்தையோடு
அந்நகரின்கண் புக்கு வதிதலும் பிறவும் கூறப்படும். |
|
5 |
சயந்தியம் பெரும்பதி இயைந்தகம்
புகுதலின் தாதுமலர் அணிந்த வீதி
தோறும் பழுக்குலைக்
கமுகும் விழுக்குளை வாழையும் கரும்பும் இஞ்சியும் ஒருங்குடன்
நிரைத்து முதுஉதுத் தரியமும் பவழப் பிணையலும் ஒத்த தாமம் ஒருங்குடன்
பிணைஇப் பூரணப் பெருங்கடைத்தோரணம் நாட்டி அருக்கன் வெவ்அழல் ஆற்றுவ
போல விரித்த பூங்கொடி வேறுபல நுடங்க
|
உரை |
|
10 |
எண்வகைச்
சிறப்போடு கண்அணங்கு
எய்த விடாஅ விளக்குஒளி வெண்பூம்
தாமமொடு படாகையும் விதானமும் பால்கடல்
கடுப்ப இருமயிர் முரசம் உரும்என
உரறக் கடமுழக்கு இன்னிசை இடைஇடை இயம்ப
|
உரை |
|
20 |
இருள்கண் புதைத்த
இருங்கண்
ஞாலத்து. விரிகதிர் பரப்பிய வெய்யோன்
போல வெங்கண்
இருட்டுயர் இங்கண்
நீக்கிய பொங்குமலர்த் தாரோய் புகுகென் போரும்
|
உரை |
|
25
30 |
. . . . .
... .. ,.,.... .. ..,..ளுட்கா தொழுகிற் பகைவர் எண்ணம் பயமில என்னும் நீதிப் பெருமைநூல் ஓதியும்
ஓராய் யானை வேட்கையில்சேனை நீக்கிப் பற்றா மன்னனின் பற்றவும்
பட்டனை பொற்றொடிப் பாவையை உற்றது தீரக் கொற்றம் எய்திக் கொண்டனை போந்த மிகுதி வேந்தே புகுகென் போரும்
|
உரை |
|
35 |
பயங்கெழு நன்நாடு பயம்பல தீரப் புகுந்தனை புகன்றுநின் புதல்வரைத்
தழீஇ ஒன்னா மன்னனைல ஓடுபுறங் கண்டு நின்னகர் நடுவண் மன்னுகென் போரும்
|
உரை |
|
|
மாயோன் மார்பில் திருமகள்
போலச் சேயோன் மார்பில் செல்வம் எய்தற்கு நோற்ற பாவாய் போற்றெனப் புகழ்நரும்
|
உரை |
|
40 |
திருமலர்ச் செங்கண் செல்வன் தன்னொடு பெருமகன் மடமகள் பின்வரக்
கண்டனம் உம்மைச் செய்த புண்ணியம் உடையம் இம்மையின் மற்றுஇனி என்ஆ
கியரென அன்புறு கிளவியர் இன்புறு வோரும
|
உரை |
|
45 |
மண்மீக்
கூரிய மன்னவன் மடமகள் பெண்மீக் கூரிய பெருநல வனப்பின் வளைபொலி பணைத்தோள் வாசவ
தத்தை உளள்என மற்றியாம் உரையில் கேட்கும் அவள்நலம் காண இவண்வயின்
தந்த மன்னருள்மன்னன்
மன்னுகஎன் போரும்
|
உரை |
|
50
55 |
கருத்தில்
குழ்ச்சியொடு கானத்து அகவயின் பெருத்திறல் வேந்தன்எம் பெருமான்
சிறைகொள மாயச் சாக்காடு மனங்கொளத் தேற்றி ஆய மூதூர் அகம்புக்கு
அவன்மகள் நாகுவளை முன்கை நங்கையைத் தழீஇப் போகெனப் புணர்த்த போகாப் பெருந்திறல் யூகியும் மன்னுக உலகினுள் என்மரும்
|
உரை |
|
60
65 |
வியன்கண் ஞாலத்து இயன்றவை கேண்மின் நன்றாய் வந்த ஒருபொருள்
ஒருவற்கு நன்றே ஆகி நந்தினும் நந்தும் நன்றாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு அன்றாய் மற்றுஅஃது அழுங்கினும்
அழுங்கும் தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்குத் தீதே ஆகித் தீயினும்
தீயும் தீதாய் வந்த ஒருபொருள் ஒருவற்கு ஆசில் பெரும்பொருள் ஆகினும் ஆம்எனச். சேயவர் உரைத்ததைச் செவியில்
கேட்கும்
|
உரை |
|
70 |
மாயி
காஞ்சனம் வத்தவர் இறைவன்குப் மெருஞ்சிறைப் பள்ளியுள் அருந்துயர்
ஈன்று தீயது
தீர்ந்தத் தீப்பொருள் தீர்ந்தவன் செல்வப் பாவையைச் சேர்த்திச் செந்நெறி அல்வழி வந்துநம் அல்லல்
தீர நண்ணத் தந்தது நன்றா கியர்எனக் கண்ணில் கண்டவன் புண்ணியம்
புகழ்நரும்
|
உரை |
|
75
80 |
ஓங்கிய பெருங்கலந் தருக்கிய உதயணன் தேங்கமழ் கோதைஎன் திருநுதல்
மாதரை வேண்டியும் கொள்ளான் வேட்டனென்
கொடுப்பின் குலத்திற்
சிறியவன் பிரச்சோ தனன்என நிலத்தின் வாழ்நர் இகழ்ச்சி
அஞ்சி யானை மாயங் காட்டி மற்றுநம் சேனைக் கிழவனைச் சிறைஎனக் கொண்டு வீணை வித்தகம் விளங்குஇழை கற்கஎன மாண்இழை அல்குல் மகள்நலம் காட்டி அடல்பேர் அண்ணலைத் தெளிந்துகை
விட்டனன், கொடுப்போர் செய்யும் குறிப்புஇஃது என்மரும்
|
உரை |
|
85 |
மற்றும் இன்னன பற்பல
பயிற்றி மகளிரும்
மைந்தரும் புகழ்வனர் எதிர்கொள அமரர் பதிபுகும் இந்திரன்
போலத் தமர்நகர் புக்கனன் தானையில் பொலிந்துஎன். |
உரை |
|
|