|
New Page 1
‘எனக்கு அவன் குணங்கள்
என்றும் தாரகமாக இருத்தல் போன்று’
பக். 312.
‘வெண்ணெயில் செய்த
விருப்பம் பொய்யில்லாதது போன்று’
பக். 312.
இன்ன படைவீட்டைக்
கொண்டாள் என்று கூறுவது போன்று.
பக். 314.
‘பிரளய ஆபத்தில்
பூமி தன் வயிற்றில் புகாவிடில் தரியாதது போன்று’
பக். 314.
‘சிலரை வசீகரிக்க
நினைத்தவர்கள் கையிலே மருந்து கொண்டு திரியுமாறு போன்று’
பக். 316.
‘அரசர்கள் கறுப்புடுத்துப்
புறப்பட்டால், விரும்புகிற காலத்தில் முகங்காட்டுகைக்காக அந்தரங்கர் மறைந்து திரிவர்; அது
போன்று’
பக். 317.
‘உலகமே உருவமாய்
இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று’
பக். 320.
‘குளப்படியிலே
கடலை மடுத்தாற்போன்று’
பக். 321.
‘பெருக்காறு கழித்தாற்போன்று’
பக். 327.
‘மலரில் மணம்
வடிவு கொண்டாற்போன்று’
பக். 328.
‘நம்மைக் கொல்ல
வருகிறான் என்று சுக்கிரீவன் முதலியோர் கூறியது போன்று’
பக். 332.
‘அத்திக்காயில்
அறுமான் போன்று’
பக். 333.
‘தம்மால் காதலிக்கப்பட்டவர்கள்
இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள், தம்மை அலங்கரித்துக்கொண்டு போமாறு போன்று’
பக்.
336.
‘கற்பகத்தரு பணைத்தாற்போன்று’
பக். 339.
‘பெருவெள்ளத்திலே
ஒரு சுழி போன்று’
பக். 339.
‘நெய்யுண்ணி என்னுமாறு
போன்று’
பக். 341.
‘இராசாக்கள் அந்தப்புரத்தில்,
ஒரு கட்டிலினின்றும் மற்றைக் கட்டில் ஏறப்போகாநிற்க, அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தங்காரியம்
கொண்டு போமாறு போன்று’
பக். 343.
‘ஆயிரங்காதம்
பறப்பதன் குட்டி ஐந்நூறு காதம் சிறகடிக்கொள்ளும் என்னுமாறு போன்று’
பக். 349.
|