தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

திருவாலீஸ்வரம்

ஊர் :

திருவாலீஸ்வரம்

வட்டம் :

அம்பாசமுத்திரம்

மாவட்டம் :

திருநெல்வேலி

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

கைலாயமுடையார்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

தலமரம் :

திருக்குளம் / ஆறு :

ஆகமம் :

பூசைக்காலம் :

திருவிழாக்கள் :

தலவரலாறு :

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

வடக்கு அரியநாயகிபுரம், அரியநாயகி அம்மன் கோயில், சிவன் கோயில், நெல்லையப்பர் கோயில், திருக்குறுங்குடி அழகிய நம்பி பெருமாள் கோயில்

சுருக்கம் :

திருவாலீஸ்வரம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருவாலீஸ்வரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்றளியாகும். இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். முழுவதும் கற்றளியாக அமைந்த இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் தற்போது இருந்து வருகிறது. கோயில் தற்காலத்தில் இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத் தளங்களில் இறைவனின் பல்வேறு வடிவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் தள வரிசை சிற்பங்களை நோக்குங்கால் முதலாம் பராந்த சோழனது புள்ளமங்கை கோயில் நினைவுக்கு வருகிறது. இக்கோயிலில் அதிக அளவிலான தமிழ் கல்வெட்டுகள் மண்டபத்தின் வெளிப்புறச் சுவர் முழுவதும் அமைந்துள்ளன. பாண்டிய நாட்டுக்கே உரிய வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. கங்காதரர், காலாந்தகமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், திரிபுராந்தகர், முருகன், பிட்சாடனர், உமையொருபாகர், தென்முகக்கடவுள், இடபாரூடர் போன்ற அரிய சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாய்ந்த நிலையில் வரிசையாக காட்டப்பட்டுள்ள யாளி சிற்பங்களும், பூதகணங்களும் எழில் வாய்ந்தவை. உபானம், ஜகதி, முப்பட்டைக்குமுதம் என்ற தாங்குதள உறுப்புகளைப் பெற்றும், இத்தாங்குதள உறுப்புகளில் கல்வெட்டுகளைப் பெற்றும் விளங்குகிறது கருவறை விமானம். முகமண்டபத்தில் சோழர் உருளைத் தூண்கள் வெட்டுப்போதிகை பெற்று விளங்குகிறது. இக்கோயில் செம்புரான் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. திராவிடப்பாணியில் அமைந்துள்ளது. கருவறை விமான தேவக்கோட்டங்கள் வெற்றிடமாக உள்ளன. அவ்விடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இல்லாதிருப்பது பாண்டியநாட்டு கலைப்பாணியாகும்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் இராஜராஜ சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

முதலாம் இராஜராஜன் காலத்து தமிழ் கல்வெட்டுகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை.கோபுரங்கள் இல்லை.சூரியன், அதிகாரநந்தி ஆகிய தனிச்சிற்பங்கள் உள்ளன. கங்காதரர், காலாந்தகமூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், திரிபுராந்தகர், முருகன், பிட்சாடனர், உமையொருபாகர், தென்முகக்கடவுள், இடபாரூடர் போன்ற அரிய சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாய்ந்த நிலையில் வரிசையாக காட்டப்பட்டுள்ள யாளி சிற்பங்களும், பூதகணங்களும் எழில் வாய்ந்தவை.சோழர்கால உருளைத்தூண்கள் வெட்டுப் போதிகை பெற்று விளங்குகின்றன. கருவறை விமான வெளிச்சுவரில் அரைத்தூண்கள் இடம்பெற்றுள்ளன.

கோயிலின் அமைப்பு :

கிழக்கு நோக்கிய வாயிலைக் கொண்டது. இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. இடைநாழிகை, அர்த்தமண்டபம், முகமண்டபம் பெற்று விளங்குகின்றது. அர்த்தமண்டபம் சோழர்கால உருளைத்தூண்களைப் பெற்றுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. திராவிடபாணியில் அமைந்த இக்கோயில் திருச்சுற்று மாளிகை பெற்றுள்ளது.

அமைவிடம் :

திருவாலீஸ்வரம், காக்கநல்லூர், திருநெல்வேலி-642961

தொலைபேசி :

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 8.00 முதல் மாலை 5.00 வரை

செல்லும் வழி :

திருநெல்வேலியிலிருந்து திருவாலீஸ்வரம் பேருந்தில் செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

திருவாலீஸ்வரம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை

தங்கும் வசதி :

திருநெல்வேலி விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:31(இந்திய நேரம்)