தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

4.0 பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    அன்பார்ந்த மாணாக்கர்களே! சங்க இலக்கியங்கள் பற்றிய
    பாடத்தில் சங்க இலக்கியம் என்பது தனிச் தனிச் செய்யுட்களின்
    தொகுப்பு என்ற கருத்தை அறிந்து கொண்டீர்கள். உலகின் பல
    மொழிகளில் கதை தழுவிய இலக்கியங்கள் பழைமையானவையாக
    அமைந்திருக்க தமிழில் அவை பின்னால் தான் தோன்றின. சங்க
    காலத்தில் கதை தழுவிய கூத்துகள் பல நிகழ்ந்திருக்க
    வாய்ப்புண்டு. பாணர், பொருநர், கூத்தர் ஆகிய கலை மரபினர்
    பற்றி அறிய முடிவதால், அவர்கள் பயன்படுத்திய கதைகள்
    இருந்திருக்க வாய்ப்புண்டு. அவை போற்றப்படாமல் அழிந்தன.
    இந்நிலையில் சிலப்பதிகாரமே தமிழில் தோன்றிய முதல் கதை
    தழுவிய இலக்கியமாக அமைகிறது. அதனை அடுத்து, அதன்
    கதைத் தொடர்ச்சியாகப்     படைக்கப்பட்ட மணிமேகலை
    தோன்றிற்று. இவற்றையடுத்துச் சமணர்களும் பௌத்தர்களும்
    தத்தம் காப்பியங்களை உருவாக்கினர். அவை மொத்தம் பத்தாகும்.
    அவை, (1) பெருங்காப்பியங்கள் (2) சிறுகாப்பியங்கள் என
    இருவகைகளாக அமைந்தன. அறம், பொருள், இன்பம், வீடு
    என்னும் நான்கு உறுதிப் பொருள்கைளையும் வற்புறுத்துவன முதல்
    வகையென்றும், அவற்றுள் ஒன்று குறைந்து இடம் பெறுவன
    இரண்டாம் வகையின     என்றும்     கூறுவர். இவற்றுள்
    சிலப்பதிகார
    மும் மணிமேகலையும் பெருங்காப்பிய வகையைச்
    சார்ந்தனவாகும். இப்பாடத்தில் இவ்விரு காப்பியங்களின்
    அமைப்பு, சிறப்பு இவற்றின் காலம், ஆசிரியர் வரலாறு முதலான
    செய்திகளை அறிவீர்கள். ஏனைய காப்பியங்கள் பற்றி வேறு
    பாடங்களில் காணலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:02:08(இந்திய நேரம்)