Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5.
முத்தொள்ளாயிர நூலின் பாடுபொருளாக எதைக் கூறலாம்?
முத்தொள்ளாயிரம் மூவேந்தர் புகழ்பாடுவது.
மன்னர்களின் வீரம், கொடை, தலைநகர், அவர்கள்
குதிரைகளின் மறம், களிறுகளின் மறம் ஆகியவையும்,
பகை மன்னர்களின் நாடுகளை அழித்துப் புகழ்
பெற்றமையும், அவர்களிடம் திறை கொண்டமையும்
புகழப்பட்டுள்ளன.