Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
பூதத்தாழ்வார் என்ற பெயர் அமையக் காரணம் யாது?
வடமொழியில் பூ என்பது ஒரு தாது. அதன் அடியாகப்
பிறந்தது பூதம் என்னும் சொல். இதற்குச் சத்து (அறிவு)
என்று பொருள். பெருமானின் திருக்குணங்களை
அனுபவித்தே சத்தைப் பெற்றார் ஆதலால்
பூதத்தாழ்வார் எனப்பட்டார்.