தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிற்றிலக்கியங்கள்

  • 1.3 சிற்றிலக்கியங்கள்

    பதினாறாம் நூற்றாண்டில் புராணங்கள் மலிந்திருந்தாலும் சிற்சில சிற்றிலக்கியங்களும் தோன்றியுள்ளன. திருவண்ணாமலை குகையில் வசித்த குகை நமச்சிவாயர் அருணகிரி அந்தாதி, திருவருணைத் தனி வெண்பா, சோணகிரி வெண்பா என்ற நூல்களை இயற்றியுள்ளார். காஞ்சிபுரம் ஞானப்பிரகாசர் என்பவர் கச்சிக் கலம்பகம் பாடியுள்ளார். அதிவீரராம பாண்டியரால் ஆதரிக்கப் பெற்ற சேறைக் கவிராசர் சீட்டுக் கவிகளும், திருக்காளத்தி நாதருலா, திருவாட்போக்கி நாதர் உலா, சேயூர் முருகன் உலா என்ற நூல்களை இயற்றியுள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    புராணம் என்ற சொல்லின் பொருள் யாது?

    2.

    திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?

    3.

    கச்சிக்கலம்பகம் பாடியவர் யார்?

    4.

    பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய சமணப் புராணங்கள் யாவை?

    5.

    தலபுராணங்களின் பயன் யாது?

புதுப்பிக்கபட்ட நாள் : 19-08-2017 16:45:27(இந்திய நேரம்)