தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.5 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை சோழர் காலத்தில் வழங்கிய தமிழ்மொழியின் இலக்கணக் கூறுகள் பற்றிய செய்திகளை நன்கு அறிந்திருப்பீர்கள்! இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்!

    சோழர் காலத் தமிழின் இலக்கண அமைப்பைத் தெரிந்து கொள்வதற்கு அக்காலத்தில் தோன்றிய மூல ஆதாரங்களான இலக்கண, இலக்கிய நூல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்! அவை மட்டுமன்றிப் பிற சான்றுகளான அரசர்களின் ஆவணங்கள், குகைக் கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றவற்றையும் நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள்!
    பல்லவர் காலத் தமிழ் மொழியின் பெயரியல் அமைப்பில் ஏற்பட்ட பதிலிடு பெயர்கள், வேற்றுமை உருபுகள், சொல்லுருபுகள் இவற்றின் தோற்றம், பெயரில் பால் காட்டும் விகுதிகள் போன்றவற்றில் எற்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் விளக்கமாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!
    பெயரியலை அடுத்து வினையியல் அமைப்பிலும்; பல வகை வினைகளின் அமைப்பு, புதிய கால இடைநிலைகளின் தோற்றம், வினையெச்ச வடிவ மாற்றங்கள் ஆகியன குறித்து நன்கு உணர்ந்திருப்பீர்கள்!
    வடமொழித் தாக்கத்தால் தமிழில் உண்டான தற்சமம், தற்பவம் எனும் அமைப்பினைச் சான்றுகளுடன் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்!

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    தமிழில் நிகழ்கால இடைநிலையினை முதன்முதலில் கூறிய இலக்கண நூல் எது?
    2.
    முன்னிலை வினைமுற்று விகுதிகள் எவை? சான்று தருக.
    3.
    சோழர் காலத்தில் இடம் பெற்ற எதிர்மறை வினையெச்ச விகுதிகளைச் சான்றுகளுடன் குறிப்பிடுக.
    4.
    தற்பவம், தற்சமம் ஆகிய இரண்டு வடமொழி ஆக்கக் கூறுகளுக்கும் இரு சான்றுகள் தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 15:58:30(இந்திய நேரம்)