தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-திரிகடுகம்,சிறுபஞ்சமூலம், ஏலாதி

 • பாடம் - 3

  C01213  திரிகடுகம்,சிறுபஞ்சமூலம்,ஏலாதி

  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  அறத்தின் சிறப்பைப் பற்றியும் உயர்வைப் பற்றியும் திரிகடுகம் கூறும் கருத்துகள் இந்தப் பாடத்தில் இடம் பெற்றுள்ளன. திரிகடுகம் கூறும் நல்ல குடும்பத்தின் பண்புகள், கல்வியின் பயன் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.

  சிறுபஞ்சமூலம் கூறும் அறக்கருத்துகள் குறிப்பாக வாழ்வியல் உண்மைகள் பற்றி இந்தப் பாடத்தில் கூறப்படுகின்றன.

  தாய்மையின் சிறப்பு, உணவு கொடுப்பதின் பயன், வீடுபேறு அடைதல் ஆகியவை பற்றி ஏலாதியில் இடம் பெற்றுள்ள செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.



  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் மருந்துப் பெயர் கொண்ட மூன்று நூல்கள் இடம் பெற்றிருப்பதை இனம் காணலாம்.
  சித்தர்களின் வைத்திய முறை அக்கால மக்களிடையே பரவியிருந்ததை அடையாளம் காணமுடியும்.
  திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மருந்துப் பெயர் கொண்ட நூல்களில் மக்கள் அறவாழ்க்கை வாழ்வதற்குரிய நெறிகள் இடம் பெற்றிருப்பதை இனம் காணலாம்.
  அறவழி வாழ்தலே வாழ்க்கை என்ற கொள்கையில் ஊறியவர்களாய் வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளைத் தங்கள் பாடல்களில் மூன்று புலவர்கள் சொல்லியிருப்பதை அடையாளம் காணமுடிகிறது.
  மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாய் மக்கள் வாழ்ந்தனர் என்ற கருத்து இம்மூன்று நூல்களிலுமே எதிரொலிப்பதை அறியலாம்.
  வாழ்க்கைக்கு வேண்டிய உறுதிப் பொருள்களை அறிதல், தன்னலமற்ற வாழ்க்கை, மற்றவர்க்கு உதவ நினைக்கும் உயர்ந்த உள்ளம் ஆகியவற்றை மனிதன் விரும்ப வேண்டும் என்றுரைப்பதே இம்மூன்று நூல்களின் நோக்கமாக அமைவதைக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-08-2017 11:36:47(இந்திய நேரம்)