தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-பழமொழி நானூறு

 • பாடம் - 6
  C01216 பழமொழி நானூறு
  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


  இலக்கியங்களில் பழமொழிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, பழமொழிகளின் அமைப்பு எவ்வாறுள்ளது, அவற்றின் சிறப்பு எது என்பவை இந்தப் பாடத்தில் முதலில் கூறப்படுகின்.

  கல்வியின் பெருமை, கற்றோரின் சிறப்பு, கல்லாதாரின் இழிவு ஆகியவையும் இல்வாழ்க்கைக்குரிய நெறிகளாகப் பழமொழிகள் கூறுவனவும் அடுத்துக் கூறப்படுகின்றன.

  அரசனின் இயல்பு, அமைச்சரின் துணை, பகைத்திறம் பார்த்தல், படைவீரர் ஆகியவை பற்றிப் பழமொழிகளில் இடம் பெற்றுள்ள செய்திகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

  முயற்சியினால் கிடைக்கும் வெற்றியும், நட்பினால் பெறக்கூடிய நன்மைகளும் பழமொழிகளின் வாயிலாக எவ்வாறு வெளியிடப்படுகின்றன என்பதும் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • நம் முன்னோரின் அனுபவ மொழிகள் பழமொழி. அவை இலக்கியமாக உருப்பெற்றிருப்பதை இனம் காணலாம்.

  • ஓர் இலக்கியம் முழுவதும் பழமொழி அடிப்படையில் படைக்கப்பட்டிருப்பதை அடையாளங் காணலாம்.

  • பண்டைத் தமிழர் தம் வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், மனிதர்களின் பல்வேறு இயல்புகள், குணங்கள் ஆகியனவற்றை எடுத்துக்காட்டும் இலக்கியக் கண்ணாடியாகப் பழமொழி இருப்பதை இனம் காணலாம்.

  • சங்ககால அரசர் வரலாறுகள், புராண இதிகாசங்களில் கூறப்படும் நிகழ்வுகள் பழமொழியில் பயின்று வருவதைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  • பழம்போல் சுவையளித்துப் பயன்தரும் பழமொழிப் பாடல்களில்  இன்றும் வழங்கும் பழமொழிகளைப் பட்டியலிடலாம்.

  • எக்காலத்துக்கும் பொருந்துவதான பழமொழிகளைத் தொகுத்து அவற்றைப் படைத்தளித்த நம் முன்னோரின் அறிவுக் கூர்மையை வியந்து போற்றலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:14:12(இந்திய நேரம்)