தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.3 தலைவியும் தலைவனும்

  • 6.3 தலைவியும் தலைவனும்

    தலைவன் தலைவியிடம் காதல் கொள்கிறான். திருமணத்திற்கு முன்பு தலைவியைக் கூடுகிறான். இதை அறிந்த தோழி தலைவனிடம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறாள். ஆனால் தலைவன் திருமணம் செய்ய முயலாது காலம் கடத்துகிறான். இதை உணர்ந்ததோழி தலைவி தலைவன் திருமணம் செய்யக் காலம் தாழ்த்துவதை அறிந்து வருந்துவதாகத் தலைவனிடம் கூறுகின்றாள். தானும் அது கண்டு வருந்துவதாகவும் தோழி கூறுகிறாள். எனவே, விரைவில் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றாள். இந்தத் துறை ''வருத்தம் கூறி வரைவு கடாவுதல்'' என்று குறிப்பிடப்படுகிறது.

    6.3.1 ஊரார் பழி அஞ்சல்

    தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாது காலம் தாழ்த்துகின்றான். தோழி பலமுறை எடுத்துக்கூறியும் தலைவன் திருமணம் செய்ய முன் வரவில்லை. ஆனால், தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு அடிக்கடி வருகின்றான். எனவே தோழி தலைவனிடம் இவ்வாறு நீ தலைவியை மறைவாகச் சந்திப்பது ஊரில் உள்ள மக்களுக்குத் தெரிந்து விட்டது. எனவே நீ இவ்வாறு வராதே என்று அறிவிக்கின்றாள். இது ''அலர் அறிவுறுத்தல்" என்று குறிப்பிடப்படுகிறது. தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள உறவை ஊர் மக்கள் அறிந்து உள்ளனர். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. இது அம்பல் எனப்படும். அம்பல் என்றால் மொட்டு என்று பொருள். தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள உறவை அறிந்த ஊரார் அதை வெளிப்படையாகக் கூறுவது அலர் எனப்படும். அலர் எனறால் மலர் என்று பொருள்.

    இனி, இந்த அலர் அறிவித்தல் என்ற துறையில் அமையும் பாடலைக் காண்போமா?

    அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆயிரம் கருத்தால்
    அலர்ஆர் கழல்வழி பாடுசெய்தாற்கு அ
    வுஇல் ஒளிகள்
    அலராய்இருக்கும் படைகொடுத்தோன் தில்லையான்

    அருள்போன்று

    அலர்ஆய் விளைகின்றது அம்பல் கைம்மிக்கு
    ஐயமெய்அருளே

    (பாடல் - 180)

    (அலர் = மலர்; வந்தித்து = வணங்கி; கழல் = அடி; லர் = வெளிப்படையான பழிச்சொல்)

    திருமால் சிவபெருமானை ஆயிரம் மலர்கள் கொண்டு வழிபாடு செய்தான். அவனுடைய அன்பைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் ஆகிய படையை அல்லது கருவியைக் கொடுத்தான். இத்தகைய சிவபெருமானின் அருளைப் போன்று நீ தலைவிக்கு அருள் செய்ய வேண்டும். ஏனெனில், நீ தலைவியை மறைவாகச் சந்தித்துப் பழகுவது ஊரில் உள்ள மக்களுக்குத் தெரிந்து அவர்கள் வெளிப்படையாகப் பழிகூறுகின்றனர். எனவே, விரைவில் நீ தலைவியை மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தலைவனிடம் தோழி கூறுகின்றாள்.

    6.3.2 தலைவனின் துணிவு

    தலைவன் தலைவியின் உறவினர்களுக்குத் தெரியாமல் தலைவியை உடன் அழைத்துக் கொண்டு செல்ல எண்ணுகிறான். இந்த எண்ணத்தைத் தலைவன் தோழியிடம் கூறுகின்றான். இதை அறிந்த தோழி தலைவனின் எண்ணத்தைத் தலைவியிடம் கூறுகின்றாள். இந்தக் கருத்து அடங்கிய துறை துணிந்தமை கூறல் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தத் துறையில் இடம் பெறும் பாடல் இதோ தரப்படுகிறது.

    குறப்பாவை நின்குழல் வேங்கைஅம் போதொடு கோங்கம்
    விராய்
    நறப்பா டலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர்
    மறப்பான் அடுப்பது
    ர் தீவினை வந்திடில் சென்றுசென்று
    பிறப்பான் அடுப்பினும் பின்னும்துன்னத் த
    கும் பெற்றியரே

    (பாடல் - 205)

    (போது = மலர்; விராய் = கலந்து; நறவு = தேன்; புளைவார் = அணிவார்; அடுப்பது = கூடுவது; அடுப்பினும் = அவ்வாறு ஏற்படினும்; துன்னத் தகும் = சேரத்தகும்; பெற்றியது = தன்மையது)

    தலைவி தோழியிடம் கூறுகின்றாள். குறவர் குலத்தில் பிறந்த பெண்ணே! சிவபெருமானுடைய புலியூரை நினைத்தவர்கள் ஒரு பொழுதும் அதை மறக்க மாட்டார்கள் அவ்வாறு அவர்கள் மறக்க நேர்ந்தால் அதனால் தீய வினை வந்து சேரும். அந்தத் தீயவினையால் பல பிறப்புகள் பிறப்பர். அவ்வாறு பல பிறப்புகள் பிறந்தாலும் (மீண்டும்) சேரத்தகும் தன்மை உடையவர். அத்தகைய தலைவர் உன் கூந்தலில் வேங்கைப் பூவோடு கோங்கம் பூவையும் பாதிரி மலரையும் சூட நினைக்கின்றார். எனவே அவருடன் செல்லாது இருத்தல் ஆகாது என்று தோழி தலைவியிடம் தலைவனின் எண்ணத்தைத் தெரிவிக்கின்றாள்.

    இறைவனை அன்புடன் நினைப்பவர்க்குப் பிறப்பு இல்லை என்பது இப்பாடலில் கூறப்படுகிறது.

    எத்தனைப் பிறப்புகள் பிறந்தாலும் கற்பு உடைய மகளிர் கணவனைப் பின்தொடர்ந்து செல்வதற்கு உரியவர்கள் ஆவர் என்பதும் இப்பாடலில் சுட்டப்படுவதைக் காணலாம்.

    6.3.3 தலைவியின் துணிவு

    தலைவன் உடன் செல்லும்படி தோழி தலைவியிடம் கூறுகின்றாள். தலைவியும் தலைவனிடம் கொண்ட அன்பின் காரணமாகத் தலைவனுடன் செல்லத் துணிகின்றாள். இந்தச் செய்தியைத் தோழி தலைவனிடம் கூறுகிறாள். இதுவே ''துணிவெடுத்து உரைத்தல்" என்ற துறையாக அமைகிறது. இந்தத் துறையில் அமையும் பாடலைப் பார்ப்போம்.

    கம்பம் சிவந்த சலந்திரன் ஆகம் கறுத்ததில்லை
    நம்பன் சிவநகர் நற்றளிர் கல்சுரம் ஆகும்நம்பா
    அம்புஅஞ்சி ஆவம் புகமிக நீண்ட அரிசிந்து
    கண்ணாள்
    செம்பஞ்சி யின்மதிக் கின்பதைக் கும்மலர் சீறடிக்கே

    ((பாடல் - 209)

    (கம்பம் = நடுக்கம்; சிவந்த = கோபம் கொண்ட; ஆகம் = உடம்பு; கறுத்த = முனிந்த; நம்பன் = எல்லோராலும் விரும்பப்படும் இறைவன்; சிவநகர் = சிவபெருமானின் திருத்தலங்களில் ஒன்று; சுரம் = காடு; ஆவம் = அம்புக் கூடு; அரி சிந்து = வரி ஓடிய; செம்பஞ்சி = ஒரு வகை மலர்; பதைக்கும் = வருந்தும்; சீறடி = சிறிய அடி)

    சலந்தரனை வெகுண்டவர் சிவபெருமான். அத்தகைய சிவபெருமானின் தலங்களில் ஒன்று சிவ நகர் என்பது ஆகும். நம் தலைவி, அம்புகள் அச்சம் கொண்டு அம்புக் கூட்டினுள் நுழைந்து விடும் படியான சிவந்த வழிகளை உடையவள். அவளுடைய பாதங்கள் மென்மையான செம்பஞ்சு மலரை மதிப்பதற்குக் கூட அஞ்சும். அத்தகைய மென்மையான அடிகளை உடையவள் தலைவி. அப்படிப்பட்ட தலைவி உன்னுடன் வருவதற்குத் துணிந்து உள்ளாள். எனவே, அவளுக்கு நீ செல்லும் வழியில் உள்ள கற்கள் நல்ல தளிர் போன்று இருக்கும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

    இப்பாடலில் தலைவியின் கண்கள் அழகாக வருணிக்கப்படுவதைக் காணலாம். தலைவி தலைவனிடம் கொண்ட அன்பும் வெளிப்படுத்தப் படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 12:23:49(இந்திய நேரம்)