தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1. சிற்றிலக்கியம் ஓர் அறிமுகம்

 • பாடம் - 1

  C01231 சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  சிற்றிலக்கியம் தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று என்று இந்தப் பாடம் விளக்குகிறது, சிற்றிலக்கியம் என்றால் என்ன என்பதை விளக்கி அதன் வகைகளைக் கூறுகிறது. சிற்றிலக்கியப் பாகுபாடுகள் அமையும் பல்வேறு அடிப்படைகளை எடுத்துரைக்கிறது. சிற்றிலக்கியத் தோற்றத்திற்கான காரணங்களை அரசியல், சமூக, சமயச் சூழல் வழியில் விளக்க முற்படுகிறது. சிற்றிலக்கியங்களின் பொதுவான சிறப்புகளை சுட்டிக் காட்டுகிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இலக்கிய வகை என்றால் என்ன என்று இனங்காணலாம்.

  • சிற்றிலக்கிய அமைப்புப் பற்றி அடையாளங்காணலாம்.

  • சிற்றிலக்கியத்திற்கும் பேரிலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளைப் பட்டியலிடலாம்.

  • சிற்றிலக்கியங்களைப் பல்வேறு நிலைகளில் வகைப்படுத்தலாம்.

  • சிற்றிலக்கியம் தோன்றிய சூழல்களை விவரிக்கலாம்.

  • சிற்றிலக்கிய வகையின் சிறப்புகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:23:33(இந்திய நேரம்)