Primary tabs
-
1.0 பாட முன்னுரை
நண்பர்களே! தமிழ் மொழியில் காணப்படும் சிற்றிலக்கிய வகைகளைப் பற்றிப் பின்வரும் பாடங்களில் அறிய உள்ளோம். அதற்கு முன்னால் சிற்றிலக்கியம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இவ்வகையில் "சிற்றிலக்கியம் - ஓர் அறிமுகம்" என்ற இப்பாடப்பகுதி அமைகின்றது. இப்பாடத்தில் சிற்றிலக்கியம் என்றால் என்ன, அதன் வகைகள், பாகுபாடுகள் முதலியன பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாமா?