தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.4 தொகுப்புரை

    பழங்காலத்தில் சமய நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அறிந்தீர்கள். சங்ககாலத்திலேயே கோயில்கள் இருந்ததையும், ஐவகை நிலத்திற்கும் தனித்தனியே தெய்வங்களை உரிமையாக்கியதையும் படித்தோம். நடுகல்லே தெய்வமாக மாறியது என்பதையும் பிற்காலப் பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோர் கற்கோயில் கட்டியதையும் அறிந்தீர்கள். சைவ, சமண, பௌத்த மடங்கள் சமய வளர்ச்சிக்கும், சமுதாயப் பணிக்கும் இருப்பிடமாக விளங்கின. மருத்துவக் கல்லூரி அமைத்து மருத்துவப் பணிகள் செய்யப்பட்டன. பல சமயங்கள் இருந்தபோதிலும் சமயப்பொறை காணப்பட்டது. மக்கள் கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர். மன்னர்களின் பிறந்த நாள் அன்று கோயில்களில் வழிபாடு நடைபெறக் கொடைகள் கொடுக்கப்பட்டன. கோயிலில் விளக்கேற்றுதல் புண்ணிய செயலாகக் கருதப்பட்டது. மலர் வழிபாடு செய்ய கோயிலில் நந்தவனம் அமைத்தனர்.

    சமயமும் வழிபாடும் எந்த வகையில் சிறப்புற்றிருந்ததன என்பதனைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1)

    மடங்கள் எதற்காக ஏற்பட்டன?

    2)

    மடத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

    3)

    தமிழகத்தின் சமணத் தலைமைப் பீடமாக எது விளங்குகிறது?

    4)

    கல்வெட்டுகள் இளைய பிள்ளையார் என்று யாரை அழைக்கிறது?

    5)

    இராசராசன் மகள் எங்கெல்லாம் சமணப் பள்ளியை ஏற்படுத்தினாள்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)