தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-1.0 பாட முன்னுரை

  • 1.0 பாட முன்னுரை

    மிகப் பழங்காலத்தில் தமிழில் பல இலக்கியங்கள் தோன்றின. இவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்களுள் சில நீண்ட அளவில் இருந்தன; சில பாடல்கள் குறுகிய அளவில் இருந்தன. நீண்ட பாடல்களை ஒன்றாகச் சேர்த்துத் தொகுத்தனர். இதற்குப் பத்துப்பாட்டு என்று பெயர். குறுகிய பாடல்களை எட்டு நூல்களாகச் சேர்த்துத் தொகுத்தனர். இதற்கு எட்டுத்தொகை என்று பெயர்.

    இவ்விரு வகைத் தொகுப்பு நூல்களையும் சங்க நூல்கள் என்பர். இவற்றிற்குப் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்னும் பெயரும் உண்டு. இப்பாடத்தில் பத்துப்பாட்டு நூல்கள் பற்றிச் சுருக்கமாகவும், அவற்றுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை பற்றி விரிவாகவும் விளக்கப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:29:50(இந்திய நேரம்)