தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

களவியல் - II

 • பாடம் – 5

  D02115 களவியல் - II

  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  பாங்கி எனப்படும் தோழி தலைவன் கருத்துக்கு உடன்படுதல் பற்றியும், அவள் வழியாக நிகழும் தலைவன் - தலைவி கூட்டம் பற்றியும் கூறுகிறது.

  அக்கூட்டம் பகலிலும் இரவிலும் நிகழ்வதற்கான குறியிடங்கள், அவற்றுள் ஏற்படும் இடர்ப்பாடுகள், (அல்லகுறிப்படுதல்) முதலான களவியல் செய்திகளையும் இப்பாடப் பகுப்பு விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • தோழி மதி உடன்படும் மூன்று நிலைகளையும் அதன் வழி அவளது அறிவாற்றலையும் அறியலாம்.
  • பாங்கியிற் கூட்டத்தின் வகைப்பாடுகளை உணரலாம்.
  • பகற்குறி, இரவுக்குறி எனப்படும் இருவகைக் குறியிடங்களைப் பற்றிய செய்திகளைக் கற்றுணரலாம்.
  • பகலிலும் இரவிலும் சந்தித்துக் கூடி மகிழும் தலைமக்களின் நுண்ணறிவையும், விடாமுயற்சியையும் அறிந்து இன்புறலாம்.
  • தலைவன் தலைவியை இணைத்து இன்புறும் தோழியின் உயர் மனப்பாங்கும், அவர்களை நெறிப்படுத்துகின்ற தோழியின் பண்பாட்டுச் சிறப்பும் அறிந்து இன்புறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:54:41(இந்திய நேரம்)