தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0212660-6.3 வகைப்பாடுகள்

  • 6.3 வகைப்பாடுகள்

    நம்பியகப் பொருள் நூல் முழுவதும் இடம் பெற்ற இலக்கணச் செய்திகளில் அமைந்த வகைப்பாடுகளை ஒருங்கு தொகுத்து ஓரிடத்தே காண்பதாகக் கீழ்க்காணும் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.

    இலக்கணப் பிரிவு

    அதன் வகை

    இவையே அவை

    தமிழ் இலக்கணம்

    5

    எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

    பொருள் இலக்கணம்

    2

    அகப்பொருள், புறப்பொருள்

    அகப்பொருள் திணைகள்

    3

    கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை

    ஐந்திணை

    5

    குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்

    கைக்கிளை

    2

    அகப்பொருட் கைக்கிளை, அகப்புறக் கைக்கிளை

    அகப்பொருட் கைக்கிளையின் பாகுபாடு

    4
    காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல்

    பெருந்திணை

    2

    அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை

    அகப்பொருள் சொல்லும் முறை

    2

    புனைந்துரை, உலகியல்

    முதற் பொருள்

    2

    நிலம், பொழுது

    பொழுது

    2

    பெரும் பொழுது, சிறு பொழுது

    சிறுபொழுது

    5

    மாலை, யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல்

    பெரும்பொழுது

    6

    இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம்

    கைகோள்

    2

    களவு, கற்பு

    களவுப் புணர்ச்சி நிலை

    4

    இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கன் கூட்டம், பாங்கியிற் கூட்டம்

    குறியிடம்

    2

    பகற் குறி, இரவுக் குறி

    பகற் குறி வகை

    3

    இரங்கல், வன்புறை, இற்செறிப்பு உணர்த்தல்

    பகற் குறி இடையீடு

    3

    விலக்கல், சேறல், கலக்கம்

    இரவுக் குறி

    9

    வேண்டல், மறுத்தல், உடன்படுதல், கூட்டல், கூடல், பாராட்டல், பாங்கிற் கூட்டல், உயங்கல், நீங்கல்

    இரவுக் குறி இடையீடு

    2

    அல்லகுறிப்படுதல், வரும் தொழிற்கு அருமை

    வரைவு

    2

    களவு வெளிப்படும் முன்பு வரைதல், களவு வெளிப்பட்ட பின்பு வரைதல்

    அறத்தொடு நிற்கும் முறை

    2

    முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி

    கற்பு

    2

    களவின் வழி வந்த கற்பு, களவின் வழி வாராத கற்பு

    கற்பில் பிரிவுகள்

    6

    பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு

    காவல் பிரிவு

    2

    அறப்புறம் காவல், நாடு காவல்

    மறையோர் திருமண முறை

    8

    பிரம்மம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்

    வினை

    2

    நல்வினை, தீவினை

    இயற்கைப் புணர்ச்சி

    2

    தெய்வத்தால் எய்துவது, தலைவியால் எய்துவது

    வன்புறை

    2

    ஐயம் தீர்த்தல், பிரிவு அறிவுறுத்தல்

    பிரிவுழிக் கலங்கல்

    2

    மருளுற்று உரைத்தல், தெருளுற்று உரைத்தல்

    இடம்தலைப்பாடு

    3

    தெய்வம் தெளிதல், கூடல், விடுத்தல்

    பாங்கி மதியுடன்பாடு

    3

    முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்

    வரைதல் வேட்கையின் காரணம்

    3

    அச்சம், உவர்த்தல், ஆற்றாமை

    வரைவு கடாதல்

    4

    பொய்த்தல், மறுத்தல், கழறல், மெய்த்தல்

    களவுப் பிரிவு

    2

    ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்

    ஒருவழித் தணத்தல்

    7

    செலவு அறிவுறுத்தல், செலவு உடன் படாமை, செலவு உடன்படுத்தல், செலவு உடன்படுதல், சென்றுழிக் கலங்கல், தேற்றி ஆற்றுவித்தல், வந்துழி நொந்துரை

    வரைவு வகை

    2

    பெண்ணின் பெற்றோர் உடன்பட்டு வழங்கும் மகட்கொடை, தலைமக்கள் தாமே நிகழ்த்தும் வரைவு

    வரைவின் கிளவிகள்

    2

    வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல்

    உடன்போக்கு

    8

    போக்கு அறிவுறுத்தல், போக்கு உடன்படாமை, போக்கு உடன்படுத்தல், உடன்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல்

    கற்பொடு புணர்ந்த கவ்வை

    5

    செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர்மனை மருட்சி, கண்டோர் இரக்கம், செவிலி பின்தேடிச் செல்லுதல்

    மீட்சி

    4
    தெளித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல்

    தலைவி தோழிக்குச் செய்யும் அணி

    2

    செவ்வணி, வெள்ளணி

    அகப்பாட்டு உறுப்புகள்

    12

    திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை

    காலம்

    3

    இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

    மெய்ப்பாடு

    8

    நகை, அழுகை, இளிவரல், மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை

    எச்சம்

    2

    சொல்லெச்சம், குறிப்பெச்சம்

    அகப்பாட்டினுள் வரும் பொருள்

    2

    உவமைப் பொருள், இறைச்சிப் பொருள்

    உவமைப் பொருள்

    2

    உள்ளுறை உவமம், வெளிப்படை உவமம்

    வெளிப்படை உவமம்

    4

    வினை உவமம், பயன் உவமம், மெய் உவமம், உரு உவமம்

    அகப்பாட்டினுள் பாடப்படும் தலைவர்

    2
    பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன்

    பாட்டுடைத் தலைவனின் பெயர்கள்

    5

    நிலப்பெயர், வினைப்பெயர், பண்புப்பெயர், குலப் பெயர், இயற்பெயர்

    பொருள் வகை (பொருள்கோள்)

    9

    புனல் யாற்றுப் பொருள்கோள் முதலியன.

    இல்வாழ்க்கைக் கூறுகள்

    4

    தலைவன் மகிழ்ச்சி, தலைவி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி

    பரத்தையிற் பிரிவு

    4

    வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், வாயில் நேர்வித்தல், வாயில் நேர்தல்

    ஊடல் கிளவிகளின் வகை

    2
    உணர்த்த உணரும் ஊடற்குரியவை, உணர்த்த உணரா ஊடற்குரியவை
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:01:35(இந்திய நேரம்)