தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 6

    E

    D02126 நம்பியகப் பொருள் பொருளமைப்பும், வகைப்பாடும்


    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    நம்பியகப் பொருள் இலக்கணச் செய்திகள் முழுமைக்குமான உறுதுணைக் கையேடாக இப்பாடம் அமைகிறது.

    நூல் முழுவதும் உற்று நோக்கி அகப்பொருள் தொடர்பாக வெளிப்படும் இலக்கணச் சிறப்புச் செய்திகளை வெளிப்படுத்துகிறது.

    அகப்பொருள் இலக்கணக் கலைச்சொற்களின் வரையறைகளை உணர்தல், நூல் முழுவதும் ஆங்காங்கே இடம் பெற்ற வகைமைகளை ஓரிடத்தில் தொகுத்துக் காணுதல் முதலான இலக்கணச் செய்திகளை இப்பாடம் வெளிப்படுத்துகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் நூல் முழுமைக்குமான புரிதல் அமையும்.

    நம்பியகப் பொருள் நூல் புலப்படுத்தும் அகப்பொருள் இலக்கணம் தொடர்பான சிறப்புப் பண்புகளைத் தொகுத்தறியலாம்.

    அகப்பொருள் இலக்கணக் கலைச்சொற்களின் வரையறைகளைச் சுருக்கமாகவும், ஒருங்கு தொகுத்தும் உணரலாம்.

    அகப்பொருள் இலக்கணத்தில் ஆங்காங்கே இடம் பெறும் வகைப்பாடுகளை ஓரிடத்தில் தொகுத்துக் கற்றுணரலாம்.

    இலக்கணம் - 3, இலக்கணம் - 4 என்னும் இரு தாள்களுக்குமான மீள் பார்வையாகக் கொண்டு தெளிவு பெறலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:02:14(இந்திய நேரம்)