தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொருளணியியல் - IV

  • பாடம் - நான்கு D03144 பொருளணியியல் - IV

    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் தண்டியலங்காரம் பொருளணியியலில்பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ளனவாகியஇலேச அணி, நிரல்நிறை அணி, ஆர்வமொழி அணி,சுவை அணி, தன்மேம்பாட்டு உரை அணி, பரியாயஅணி, சமாகித அணி ஆகிய ஏழு அணிகளைப் பற்றிச்சொல்கிறது. இந்த ஏழு அணிகளின் இலக்கணம்,அவற்றின் வகைகள், அவற்றிற்குச் சான்றாகக் காட்டப்படும்மேற்கோள் பாடல்கள், அப்பாடல்களின் பொருள், அணிஇலக்கணப் பொருத்தம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும்விளக்கமாகவும் இந்தப் பாடம் சொல்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இலேச அணி, நிரல்நிறை அணி, ஆர்வமொழிஅணி, சுவை அணி, தன்மேம்பாட்டு உரை அணி, பரியாயஅணி, சமாகித அணி ஆகிய ஏழு அணிகளின்இலக்கணத்தைத் தெளிவாக     அறிந்து கொள்ளலாம்.இவ்வணிகளின் வகைகள் எவை எவை என்பதைத்தெரிந்து கொள்ளலாம். அவ்வகைகளில் குறிப்பிடத்தக்கமுக்கியமான சிலவற்றிற்கு விளக்கம், எடுத்துக்காட்டு,பாடல்கள், அப்பாடல்களின் பொருள் ஆகியவற்றையும்புரிந்து கொள்ளலாம். அப்பாடல்களில் அமைந்துள்ளஅணிகளின் இலக்கணப் பொருத்தத்தை விளக்கிக் காட்டும்திறத்தைப் பெறலாம். மேலும் இவ்வணிகளில் சில தமிழ்இலக்கியங்களில் பயின்று வருவதைத் தக்க சான்றுகளுடன்எடுத்துக்காட்டும் வல்லமை பெறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 19:02:20(இந்திய நேரம்)